தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

மு.க.ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு

தி.மு.க. சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பிறந்தநாள்கள், தி.மு.க. தொடங்கப்பட்ட நாள் ஆகிய மூன்றையும் இணைத்து முப்பெரும் விழா நடத்தப்படுகிறது.

அந்த வகையில், 2026-ம் ஆண்டுக்கான தி.மு.க. முப்பெரும் விழா இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட தி.மு.க. முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக தி.மு.க. முப்பெரும் விழா ஒத்திவைக்கப்படுவதாகவும் முப்பெரும் விழாவுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த அண்ணா பிறந்தநாள் விழாவிலும் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவில்லை.

அதுகுறித்து துரைமுருகன் கூறுகையில், மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் அண்ணா சிலைக்கு மாலை போடவில்லை என தெரிவித்தார்.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel