INDIAN 7

Tamil News & polling

பா.ஜ.க. தலைவர் - தேடல் முடிவுகள்

எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு சென்னை, தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடத்தப்பட கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, கட்சிகள் கூட்டணி அமைப்பது உள்ளிட்ட தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. ஒரு கூட்டணியாக செயல்பட்டு வருகின்றன.

எதற்காக டெல்லி பயணம்?- செங்கோட்டையன் பதில் கோவை: டெல்லி செல்வதற்காக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கோவை விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அவரிடம், டெல்லியில் பா.ஜ.க. தலைவர்களை சந்திக்க செல்கிறீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு செங்கோட்டையன், ஹரித்துவார் சென்று ராமரை தரிசனம் செய்தால் சற்று மன ஆறுதலாக இருக்கும் என்பதால் செல்கிறேன். டெல்லி சென்று அங்கிருந்து

மீண்டும் தவறு செய்யும் பாஜக! டெல்லி செல்லும் ஓபிஎஸ்? பிரதமரை சந்திக்க ஏற்பாடு.. பிரதமர் தமிழகம் வந்தபோது தன்னை சந்திக்க அப்பாயின்மென்ட் தரவில்லை எனக் கூறி, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து திடீரென விலகியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விலகலுக்குப் பிறகு, ஓ.பி.எஸ். இரண்டு முறை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசியது மேலும் சலசலப்பை உருவாக்கியது. “ஓ.பி.எஸ்.ஐ எடப்பாடி

தமிழக சுகாதாரத் துறையை சீரமைக்க வேண்டும்- அண்ணாமலை சென்னை, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- செங்கல்பட்டு மாவட்டம் சதுரங்கப்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், செவிலியர்கள் மற்றும் உதவியாளர்கள் பிரசவம் பார்த்ததால், குழந்தை இறந்துவிட்டதாக வந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது. குழந்தையின் பெற்றோர்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. சமீபகாலமாக, தமிழக சுகாதாரத்

பொன்முடி மீது சேறு வீச்சு : திமுகவுக்கு மக்கள் கொடுக்கப்போகும் பாடம் இது - அண்ணாமலை ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம் உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்கள் கடும் பாதிப்புகளைச் சந்தித்தன. எனவே ஆளும் கட்சி மற்றும் அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று ஆய்வுசெய்து, ஆறுதல் கூறியும், நிவாரணங்கள் அளித்தும் வருகின்றனர். இதற்கிடையே, விழுப்புரம் மாவட்டத்தின் இருவேல்பட்டு பகுதிக்கு சென்ற வனத்துறை அமைச்சர் பொன்முடி மற்றும்

தமிழக பாஜக தலைவர் மாற்றம்!... பாஜக தலைவராகிறார் எஸ்.பி.வேலுமணி! கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, "நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருந்தால் 30-35 தொகுதிகள் வரை வென்றிருப்போம். தமிழிசை, எல்.முருகன் இருந்தபோது அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி நன்றாகத்தான் இருந்தது; கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை. அண்ணாமலை பா.ஜ.க. மாநில தலைவரான பிறகுதான், பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணியில் பிளவு ஏற்பட்டது.

தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க.,  டி.டி.வி. தினகரன் வசமாகும் : அண்ணாமலை பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், தேனி தொகுதியில் டி.டி.வி. தினகரனே போட்டியிடுகிறார். தேனி தொகுதியில் போட்டியிடும் டி.டி.வி. தினகரன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக தமிழக பா.ஜ.க. தலைவர்

பிரதமர் மோடியின் சென்னை வருகை மிக பெரிய தாக்கம் ஏற்படுத்தும்:  அண்ணாமலை பேட்டி நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு, பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக பிரதமர் மோடி, 7-வது முறையாக தமிழகம் வந்துள்ளார். இதற்காக மராட்டிய மாநிலத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடிக்கு கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில்

கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதில் கருணாநிதிக்கும் பங்கு உண்டு - அண்ணாமலை பேட்டி கோவை பீளமேட்டில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-கச்சத்தீவு விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெளிவான விளக்கம் அளித்துள்ளார். தி.மு.க.விற்கு சில கேள்விகளை வைத்திருக்கிறேன். தி.மு.க.வினர் தமிழக மக்களை வஞ்சித்திருக்கிறார்கள், ஏமாற்றி இருக்கிறார்கள். கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டதில் காங்கிரஸ் மட்டுமின்றி, தி.மு.க.வின் சதியும் உள்ளது. இதில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கும்

கிரிக்கெட்டுக்கு தோனி, அரசியலுக்கு அண்ணாமலை - ராதிகா பேச்சு விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பா.ஜ.க. வேட்பாளர் ராதிகா மற்றும் சரத்குமாருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து வரவழைக்கப்பட்ட மாலை அணிவிக்கப்பட்டு, ராதிகாவுக்கு ஆண்டாள் கையில் வைத்திருக்கும் கிளி வழங்கப்பட்டது. தொடர்ந்து கூட்டத்தில் பா.ஜ.க வேட்பாளர் ராதிகா பேசியதாவது:-இந்தியா



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்