INDIAN 7

Tamil News & polling

கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதில் கருணாநிதிக்கும் பங்கு உண்டு - அண்ணாமலை பேட்டி

01 ஏப்ரல் 2024 11:51 AM | views : 72
Nature

கோவை பீளமேட்டில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-கச்சத்தீவு விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெளிவான விளக்கம் அளித்துள்ளார். தி.மு.க.விற்கு சில கேள்விகளை வைத்திருக்கிறேன். தி.மு.க.வினர் தமிழக மக்களை வஞ்சித்திருக்கிறார்கள், ஏமாற்றி இருக்கிறார்கள்.

கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டதில் காங்கிரஸ் மட்டுமின்றி, தி.மு.க.வின் சதியும் உள்ளது. இதில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கும் பங்கு உண்டு. ஆர்.டி.ஐ. கிடைக்க பெற்ற தகவல்களில் தெளிவாக தெரிந்துள்ளது. ஆழ்கடலில் நடக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் தி.மு.க.தான். மீனவர்கள் விவகாரம் உட்பட அனைத்து பிரச்சினைகளுக்கும் தி.மு.க.வே பொறுப்பேற்க வேண்டும்.கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. கச்சத்தீவை மீண்டும் நம்வசம் கொண்டுவர வேண்டும், அப்போதுதான் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும். கச்சத்தீவு மீட்பு வாக்குறுதி தமிழக பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் இடம்பெறும். தி.மு.க.வின் போலி முகத்திரையை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்த வேண்டும்.

கச்சத்தீவு விவகாரத்தில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது. கச்சத்தீவு பிரச்சினையை தீர்க்க மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது. தமிழக மீனவர்கள் மீது மத்திய அரசு அக்கறை கொண்டுள்ளது. கச்சத்தீவு விவகாரத்தில் இந்தியாவுக்கு ஒரு பைசா கூட ஆதாயம் கிடையாது. இந்திய இறையான்மை கேள்விக்குறியாக்கி இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image கும்பகோணம் அருகே தாராசுரம் பைபாஸ் மைதானத்தில் நடைபெறும் இந்திய யூனியன் முஸ்லிக் லீக் மாநாட்டில் முதல்வர் உரையாற்றுகிறார். சிறுபான்மை உரிமையை காப்போம் எனும் தலைப்பில் நடைபெறும் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.

Image தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கூறியதாவது:- தவெக vs திமுக என்பதில் ஃபைனலுக்கு வந்துவிட்டோம், அதிமுகவை அட்டாக் செய்ய வேண்டாம். தலைவர் சொன்னதைப்போல தவெக தொண்டர்கள் திமுகவை மட்டும்

Image சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆதி என்ற இளைஞர் கூலிப்படையினரால் கொடூரமான முறையில் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறை,

Image திண்டுக்கல் மாவட்டம், வேலுநாச்சியார் வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.1,595 கோடியில் 111 முடிவுற்றப் பணிகளைத் திறந்து வைத்து, 212 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி,

Image தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் அதிமுக - பாஜக கூட்டணி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே உறுதி செய்யப்பட்டது.

Image சென்னை, கடந்த சட்டசபை தேர்தலில் (2021) டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்த தே.மு.தி.க. 60 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால், ஒன்றில் கூட வெற்றி



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்