Tamil News & POLLING

 

ஒரு வருடம் கூட மோடி ஆட்சி நிலைக்காது .. சுப்பிரமணிய சாமி கணிப்பு!

1 year ago 11 ஜூன் 2024 03:18 AM | views : 153
தனியார் ஊடகத்துக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி அளித்துள்ள பேட்டியில், பாஜக ஆட்சி அமைத்திருக்கவே கூடாது. எதிர்க்கட்சியாகக் கொஞ்சக் காலம் அமர்ந்திருக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியை ஆட்சியமைக்க விட்டிருக்க வேண்டும்.

அந்த ஆட்சி கொஞ்ச நாளில் கவிழ்ந்து இருக்கும். அதன் பின்பாக மீண்டும் பாஜக ஆட்சி அமைக்க உரிமை கோரி இருக்கலாம். நான் இதை விமர்சிக்கிறேன்.

ஆகவேதான், அவரது அமைச்சரவையில் ஜால்ரா போடுகின்றவர்களை எல்லாம் சேர்த்துக் கொண்டுள்ளார். நான் மோடியின் தலைமையை ஏற்கவில்லை. அதற்கு சில காரணங்கள் உள்ளன. அதை இப்போது வெளிப்படையாகப் பேச முடியாது.

நான் தான் முதலிலிருந்தே பாஜகவுக்குப் பெரும்பான்மை கிடைக்காது என்று சொல்லி வந்தேன். அதைப்போல இப்போது 240தான் கிடைத்துள்ளது. எனது கணிப்புப் படி இந்த ஆட்சி அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் கவிழ்ந்துவிடும். அதற்கு இந்த அரசு மேல் தாக்குப் பிடிக்காது.

பாஜகவை சில விசேச கொள்கைகளுக்காக உருவாக்கினோம். சந்திரபாபு நாயுடுவும் நிதிஷ்குமாரும் வந்த பிறகு எப்படி இந்தத்துவாவைப் பற்றிப் பேச முடியும்? அதைப் பேச இவர்களுக்கு இப்போது தைரியம் இருக்குமா? ஆகவே, பேச மாட்டார்கள். அப்படிப் பேசினால், இந்த இருவரும் கூட்டணியை விட்டுச் சென்றுவிடுவார்கள்.

காங்கிரஸ் அழைத்தால் நிதிஷும் நாயுடுவும் போய் விடுவார்கள். தேர்தலுக்கு முன்பாக நாயுடு காங்கிரஸ் கூட்டணியில்தானே இருந்தார்.

அப்புறம் பல்டி அடித்து பாஜகவுக்கு வந்துவிட்டார். இப்படி ஒரு கொள்கை இல்லாமல் அரசியல் செய்யக் கூடாது என்று கூறியுள்ளார்.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK தவெக ANNAMALAI AMMK MK STALIN ADMK எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரன் பாராளுமன்ற தேர்தல் AIADMK TAMIL NADU TTV DHINAKARAN காங்கிரஸ் உதயநிதி ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் மு.க.ஸ்டாலின் இந்திய அணி INDIAN CRICKET TEAM ANBUMANI RAMADOSS முக ஸ்டாலின் சீமான் ரஜினிகாந்த் CONGRESS PMK கனமழை UDHAYANIDHI STALIN தமிழகம் பாமக PARLIAMENT ELECTION பிரதமர் மோடி அன்புமணி ராமதாஸ் சட்டசபை தேர்தல் கொலை EDAPPADI PALANISWAMI வடகிழக்கு பருவமழை அமமுக KEERTHY SURESH தீபாவளி கைது COIMBATORE கோவை SEEMAN ஓபிஎஸ் திருமாவளவன் AJITH THIRUMAVALAVAN தென்காசி திருநெல்வேலி விடுமுறை தமிழ்நாடு கள்ளக்காதல் நெல்லை NELLAI TAMILAGA VETTRI KAZHAGAM TAMIL ACTRESS மதுரை THOOTHUKUDI தமிழக அரசு வன்னியர் டிரெண்டிங் பாலியல் தொல்லை தேவர் டாப் நியூஸ் ELECTION COMMISSION ASSEMBLY ELECTIONS திருப்பரங்குன்றம் SENGOTTAIYAN 2024 T20 WORLDCUP கொரோனா TAMIL CINEMA OPS NORTHEAST MONSOON வானிலை ஆய்வு மையம் MADURAI அஜித் நயினார் நாகேந்திரன் கீர்த்தி சுரேஷ்