Tamil News & POLLING

 

ஒய்.எஸ்.ஆர் கட்சியினர் மீது தெலுங்கு தேசம் தாக்குதல்! பழிக்கு பழி

1 year ago 08 ஜூன் 2024 01:39 AM | views : 177
ஆந்திர மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் முன்னாள் அமைச்சர் கோடாலி நானி, முன்னாள் எம்.எல்.ஏ. வல்லபனேனி வம்சி ஆகியோர் வீட்டிற்கு தெலுங்கு தேச கட்சியினர் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்த முயன்றனர்.

போலீசார் தடுத்து நிறுத்தினர் பின்னர் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சின்னம் பேனை கயிறு கட்டி தறையில் இழுத்து சென்றனர். ராஜமுந்திரி மோரம்பூடி மேம்பாலத்தை பார்வையிட தெலுங்கு தேசம் கட்சியின் நகர எம்எல்ஏ ஆதிரெட்டி வாசு சென்றபோது கடந்த ஆட்சியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி.யாக இருந்து தற்போது நடந்த தேர்தலில் ராஜமுந்திரி எம்.எல்.ஏ.வாக நின்று தேல்வியடைந்த பாரத் பெயர் எழுதப்பட்ட இருந்ததால் மோரம்பூடி மேம்பாலம் கல்வெட்டு பலகையை தெலுங்கு தேசம் கட்சியினர் அடித்து உடைத்தனர்.

அவர்களை தடுத்து நிறுத்திய போலீசாருடன் வாக்குவாதம் நடந்தது.தெலுங்கு தேசம் கட்சியினரின் கிளர்ச்சியால் போலீசார் அமைதியாக நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

அனந்தபுரம் ஸ்ரீகிருஷ்ண தேவராய பல்கலைக்கழகத்தில் ஆறு மாதங்களுக்கு முன்பு ஒய்.எஸ்.ஆர். சிலை பல்கலைகழக ஆட்சிமன்றத்தின் அனுமதியின்றி சிலை நிறுவப்பட்டதாக கூறி மாணவர் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வந்த நிலையில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வந்துள்ளதால் ஒய்.எஸ்.ஆர். சிலையை அதிகாரிகள் அகற்றினர்.

திருப்பதி மாவட்டம் பெதலக்குரு மண்டலம் சில்லகுரு கிராமத்தில் துவ்வூர் விஜய் சேனா ரெட்டி தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் தெலுங்கு தேச கட்சி தலைவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி கொண்டிருந்த போது, ​​ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த காமிரெட்டி சத்யநாராயண ரெட்டியின் ஆதரவாளர்கள் விஜய் சேனா ரெட்டி மீது தாக்குதல் நடத்தினர்.

இதில் காயமடைந்தவர்கள் நாயுடுபேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அங்கு பதற்றமான சூழல் உருவாகி உள்ளது.



இதேபோன்று மாநிலத்தில் ஐந்து ஆண்டுகளாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் ஆட்சியில் பல இன்னல்களை சந்தித்தவர்கள் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் பழிக்கு பழிவாங்கி வருகின்றனர். இதனால் பல இடங்களில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் யாருக்கும் தெரியாமல் தலைமறைவாக வெளி ஊர்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக ANNAMALAI ADMK AMMK AIADMK எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரன் TTV DHINAKARAN MK STALIN உதயநிதி ஸ்டாலின் TAMIL NADU பாராளுமன்ற தேர்தல் காங்கிரஸ் ANBUMANI RAMADOSS தமிழக வெற்றிக் கழகம் மு.க.ஸ்டாலின் முக ஸ்டாலின் PMK இந்திய அணி தமிழகம் கனமழை UDHAYANIDHI STALIN INDIAN CRICKET TEAM CONGRESS ரஜினிகாந்த் சீமான் பாமக PARLIAMENT ELECTION அன்புமணி ராமதாஸ் பிரதமர் மோடி COIMBATORE வடகிழக்கு பருவமழை EDAPPADI PALANISWAMI கோவை கைது அமமுக தீபாவளி NELLAI சட்டசபை தேர்தல் கொலை KEERTHY SURESH நெல்லை SEEMAN OPS மதுரை TAMILAGA VETTRI KAZHAGAM திருமாவளவன் THIRUMAVALAVAN தென்காசி கள்ளக்காதல் திருநெல்வேலி TAMIL ACTRESS தமிழ்நாடு AJITH NORTHEAST MONSOON வானிலை ஆய்வு மையம் SENGOTTAIYAN நடிகை டிரெண்டிங் தமிழக அரசு ஓபிஎஸ் கீர்த்தி சுரேஷ் கொரோனா திருப்பரங்குன்றம் டாப் நியூஸ் ELECTION COMMISSION 2024 T20 WORLDCUP தேவர் விடுமுறை MADURAI வன்னியர் ASSEMBLY ELECTIONS THOOTHUKUDI TAMIL CINEMA அஜித்