Tamil News & POLLING

 

அதிமுகவுடன் இனி கூட்டணியே கிடையாது : அண்ணாமலை!

1 year ago 06 ஜூன் 2024 11:02 AM | views : 161
டெல்லி செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர் அண்ணாமலையும் ஆட்டுக்குட்டியும் என ஊடகங்களில் வெளியாவது குறித்து கேட்டதற்கு, அண்ணாமலை மீது கோபம் இருந்தால் என் மீது கை வையுங்கள், ஆட்டை அடிக்க வேண்டாம் என்றார்.

அதிமுக, பாஜக இணைந்து போட்டியிட்டால் 30 முதல் 35 இடங்களை தமிழகத்தில் வென்றிருக்க முடியும் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியது குறித்து கேட்டபோது, அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி வைக்க வாய்ப்பு இல்லை என தெரிவித்தார்.

மேலும் நடந்து முடிந்த மக்களவை தேர்தல் குறித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி, தவறான புள்ளி விவரங்களை கொடுத்துள்ளார் என்றார். கோவை மக்கள் அதிமுகவை புறக்கணித்து விட்டதாக கூறிய அண்ணாமலை, தற்போது நடந்து முடிந்த தேர்தலில், பாஜக அதிக எண்ணிக்கையில் வாக்குகளை பெற்றுள்ளதாக கூறினார். படிப்படியாகத்தான் வெற்றியை எட்ட முடியும் எனக் கூறிய அவர் பாஜக கோவையில் அதிகமாக வாக்குகள் பெற்று, இரண்டாம் இடத்தில் முன்னேறி உள்ளது என்றார்.எடப்பாடி பழனிச்சாமி, எஸ்.பி வேலுமணி இடையே உட்கட்சி பூசல் நிலவி வருகிறது, அதை அவர்கள் முதலில் சரி செய்து கொள்ளட்டும் என தெரிவித்தார்.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக ANNAMALAI MK STALIN AMMK ADMK பாராளுமன்ற தேர்தல் எடப்பாடி பழனிசாமி AIADMK TTV DHINAKARAN உதயநிதி ஸ்டாலின் TAMIL NADU டிடிவி தினகரன் காங்கிரஸ் மு.க.ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் ANBUMANI RAMADOSS இந்திய அணி முக ஸ்டாலின் INDIAN CRICKET TEAM கனமழை சீமான் ரஜினிகாந்த் CONGRESS PMK UDHAYANIDHI STALIN பாமக தமிழகம் அன்புமணி ராமதாஸ் PARLIAMENT ELECTION பிரதமர் மோடி வடகிழக்கு பருவமழை கைது COIMBATORE கோவை சட்டசபை தேர்தல் தீபாவளி KEERTHY SURESH கொலை EDAPPADI PALANISWAMI SEEMAN அமமுக தமிழ்நாடு ஓபிஎஸ் AJITH நெல்லை கள்ளக்காதல் திருநெல்வேலி NELLAI THIRUMAVALAVAN திருமாவளவன் TAMILAGA VETTRI KAZHAGAM விடுமுறை மதுரை TAMIL ACTRESS தென்காசி THOOTHUKUDI திருப்பரங்குன்றம் தேவர் SENGOTTAIYAN பாலியல் தொல்லை TAMIL CINEMA கொரோனா ELECTION COMMISSION வன்னியர் OPS ASSEMBLY ELECTIONS டாப் நியூஸ் டிரெண்டிங் NORTHEAST MONSOON நயினார் நாகேந்திரன் அஜித் MADURAI தமிழக அரசு வானிலை ஆய்வு மையம் 2024 T20 WORLDCUP கீர்த்தி சுரேஷ்