Tamil News & POLLING

 

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது: திருமாவளவன் அறிவிப்பு

1 year ago 29 ஏப்ரல் 2024 06:58 AM | views : 144
சென்னை,விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு தளங்களில் சாதனைகள் படைத்த சான்றோருக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம்.

சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றும் சிறப்புமிக்க தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமை வாய்ந்த சான்றோருக்கு "அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு " ஆகிய விருதுகளை 2007 முதல் ஆண்டுதோறும் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம்.

அந்தவரிசையில் 2024 ஆம் ஆண்டுக்கான விசிக விருதுகள் பெறும் சான்றோரின் பட்டியலை வெளியிடுவதில் பெருமைப்படுகிறோம். இந்த ஆண்டுக்கான "அம்பேத்கர் சுடர்" விருதினை திரைப்படக் கலைஞரும் மதச்சார்பின்மைக்காக சமரசமில்லாமல் போராடி வருபவருமான பிரகாஷ்ராஜ் அவர்களுக்கும், பெரியார் ஒளி விருதினை திராவிடர் கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி அவர்களுக்கும் வழங்குவதில் பெருமைப்படுகிறோம்.

விருதுகள் பெறுவோரின் விவரம் பின்வருமாறு:-அம்பேத்கர் சுடர்: பிரகாஷ்ராஜ், திரைப்படக் கலைஞர்பெரியார் ஒளி: வழக்கறிஞர் அருள்மொழி, பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்மார்க்ஸ் மாமணி: இரா. முத்தரசன், மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி காமராசர் கதிர்: பேராயர் எஸ்றா சற்குணம். தலைவர், இந்திய சமூக நீதி இயக்கம்அயோத்திதாசர் ஆதவன்: பேராசிரியர் ராஜ்கௌதமன்காயிதேமில்லத் பிறை: எஸ்.என். சிக்கந்தர், மேனாள் மாநிலத் தலைவர், வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியாசெம்மொழி ஞாயிறு: எ.சுப்பராயலு, கல்வெட்டியலறிஞர் விசிக விருதுகள் வழங்கும் விழா (25.05.2024) அன்று சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK தவெக ANNAMALAI AMMK TTV DHINAKARAN காங்கிரஸ் டிடிவி தினகரன் AIADMK TAMIL NADU MK STALIN பாராளுமன்ற தேர்தல் ADMK உதயநிதி ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி ANBUMANI RAMADOSS தமிழக வெற்றிக் கழகம் INDIAN CRICKET TEAM முக ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் இந்திய அணி ரஜினிகாந்த் கனமழை UDHAYANIDHI STALIN CONGRESS PMK சீமான் தமிழகம் பாமக பிரதமர் மோடி அன்புமணி ராமதாஸ் கொலை கைது PARLIAMENT ELECTION COIMBATORE KEERTHY SURESH தீபாவளி SEEMAN வடகிழக்கு பருவமழை சட்டசபை தேர்தல் அமமுக கோவை EDAPPADI PALANISWAMI TAMIL ACTRESS விடுமுறை மதுரை TAMILAGA VETTRI KAZHAGAM திருமாவளவன் நெல்லை THIRUMAVALAVAN திருநெல்வேலி தமிழ்நாடு ஓபிஎஸ் NELLAI தென்காசி AJITH கள்ளக்காதல் OPS கீர்த்தி சுரேஷ் திருப்பரங்குன்றம் தமிழக அரசு தேவர் டிரெண்டிங் NORTHEAST MONSOON டாப் நியூஸ் அஜித் 2024 T20 WORLDCUP வன்னியர் MADURAI ASSEMBLY ELECTIONS வானிலை ஆய்வு மையம் நயினார் நாகேந்திரன் THOOTHUKUDI ELECTION COMMISSION