Tamil News & POLLING

 

டீக்கடையில் பஜ்ஜி சுட்டு வாக்கு சேகரித்த ஓ.பன்னீர் செல்வம்

1 year ago 06 ஏப்ரல் 2024 04:16 PM | views : 147
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜனதா கூட்டணியின் சார்பில் சுயேச்சையாக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், ராமநாதபுரத்தில் அவரது ஆதரவாளர்களுடன் தங்கி இருந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பட்டிணம்காத்தான் சோதனை சாவடி அருகே தேர்தல் அலுவலகம் அமைத்துள்ளார்.

தினமும் சட்டமன்ற தொகுதி வாரியாக ஒன்றிய வாரியாக கிராமங்களுக்கு சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். இவ்வாறு இன்று பிரசாரத்திற்கு சென்ற ஓ.பன்னீர் செல்வம் ராமநாதபுரம் அருகே அச்சுந்தன்வயலில் உள்ள டீக்கடைக்கு சென்று டீ குடித்தார். அப்போது அந்த கடையில் பஜ்ஜி சுடுவதற்காக பலகார மாஸ்டர் தயார் செய்து கொண்டிருந்தார்.

அவருக்கு உதவுவதற்காக சென்ற ஓ.பன்னீர் செல்வம், ஏற்கனவே தயாராக இருந்த பஜ்ஜி மாவில் வாழைக்காய்களை தோய்த்து எண்ணையில் போட்டு பஜ்ஜி சுட்டார். இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாக்காளர்கள், நெடுஞ்சாலையில் வாகனங்களில் சென்றவர்கள் கடை முன்பு குவிந்தனர். அவர்களிடம் சாதாரணமாக பேசிக்கொண்டிருந்த ஓ.பன்னீர் செல்வம், தான் ஆரம்ப காலத்தில் பெரியகுளத்தில் டீக்கடை நடத்தி வந்ததை குறிப்பிட்டு, பழையதை என்றும் மறக்கவில்லை என்று கூறினார். தனக்கு பலாப்பழம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK தவெக ANNAMALAI AMMK TAMIL NADU MK STALIN பாராளுமன்ற தேர்தல் ADMK TTV DHINAKARAN AIADMK டிடிவி தினகரன் காங்கிரஸ் உதயநிதி ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி மு.க.ஸ்டாலின் ANBUMANI RAMADOSS PMK முக ஸ்டாலின் பாமக சீமான் UDHAYANIDHI STALIN தமிழக வெற்றிக் கழகம் கனமழை இந்திய அணி தமிழகம் ரஜினிகாந்த் CONGRESS INDIAN CRICKET TEAM PARLIAMENT ELECTION கொலை அன்புமணி ராமதாஸ் பிரதமர் மோடி கைது தீபாவளி SEEMAN கோவை வடகிழக்கு பருவமழை அமமுக EDAPPADI PALANISWAMI COIMBATORE சட்டசபை தேர்தல் KEERTHY SURESH திருமாவளவன் TAMIL ACTRESS மதுரை AJITH திருநெல்வேலி THIRUMAVALAVAN கள்ளக்காதல் TAMILAGA VETTRI KAZHAGAM நெல்லை விடுமுறை தென்காசி தமிழ்நாடு ஓபிஎஸ் NELLAI நாடாளுமன்ற தேர்தல் நயினார் நாகேந்திரன் டிரெண்டிங் டாப் நியூஸ் MADURAI வன்னியர் திருப்பரங்குன்றம் THOOTHUKUDI கீர்த்தி சுரேஷ் NORTHEAST MONSOON நடிகை தேவர் அஜித் தமிழக அரசு வானிலை ஆய்வு மையம் ELECTION COMMISSION ASSEMBLY ELECTIONS 2024 T20 WORLDCUP OPS