பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ரூ.4 கோடி பணம் தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல்!

பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ரூ.4 கோடி பணம் தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல்!

  ஏப்ரல் 07, 2024 | 03:29 am  |   views : 126


தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கான நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம், நகை மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும்படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்த நிலையில் சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு 8:10 மணிக்கு வழக்கம்போல் புறப்பட்டு சென்றது. இந்த ரெயில் மூலமாக அரசியல் கட்சியை சேர்ந்த சிலர் தேர்தல் செலவிற்கு பணம் கொண்டு செல்வதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.



இதனை தொடர்ந்து சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் இரவு 8:35 மணிக்கு வந்து நின்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் திடீரென ஏறிய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பயணிகளில் உடமைகளை வாங்கி அதிரடி சோதனை நடத்தினர்.



அப்போது அங்கு சந்தேகத்துடன் இருந்த 3 பேரின் உடமைகளை எடுத்து பரிசோதித்ததில் அவர்களது பைகளில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 3 பேரையும் உடனடியாக பணத்துடன் தாம்பரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் பணத்தை எண்ணிப் பார்க்கும்போது அதில் ரூ,3.99 கோடி பணம் இருந்தது தெரியவந்தது.



Also read...  பிகினி ஆடையில் அருவியில் குளியல்… லீக்கான வீடியோ ; பதறிப் போன ராஷ்மிகா மந்தனா..!!!


பிடிபட்டவர்களிடம் அந்த பணத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லாமல் இருப்பதும் தெரியவந்தது. அந்த பணத்தை அவர்கள் யாருக்காக கொண்டு சென்றார்கள்? வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக கொண்டு சென்றார்களா? பணத்தை அவர்களுக்கு கொடுத்து அனுப்பியது யார்? என்பது குறித்து பிடிபட்ட நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.



இந்த நிலையில், பணத்துடன் பிடிபட்டவர்கள் புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பா.ஜ.க. உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன், லாரி ஓட்டுநர் பெருமாள் என்பது தெரியவந்தது. நெல்லை பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு பணத்தை கொண்டு செல்ல முயன்றதாக கைதான மூவரும் வாக்குமூலம் அளித்துள்ளனர். தொடர்ந்து 3 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.


எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.




கொளுத்தும் வெயில்... ஜூன் 10-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும்.. கோடை விடுமுறை நீட்டிப்பு

2024-05-31 10:57:15 - 1 day ago

கொளுத்தும் வெயில்... ஜூன் 10-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும்.. கோடை விடுமுறை  நீட்டிப்பு தமிழகத்தில் கடந்த ஏப்ரல் இறுதியில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து வருகிற 6-ந்தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து இருந்தது.இந்த நிலையில், கத்திரி வெயில் முடிவடைந்தாலும், தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறையவில்லை. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகி


பிகினி ஆடையில் அருவியில் குளியல்… லீக்கான வீடியோ ; பதறிப் போன ராஷ்மிகா மந்தனா..!!!

2024-05-31 08:00:47 - 1 day ago

பிகினி ஆடையில் அருவியில் குளியல்… லீக்கான வீடியோ ; பதறிப் போன ராஷ்மிகா மந்தனா..!!! கடந்த சில நாட்களாக நடிகைகளின் DEEP FAKE வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராஷ்மிகா வீடியோ வெளியாகியது பிரதமர் வரை கொந்தளிக்க செய்தது. ராஷ்மிகாவை தொடர்ந்து நடிகை கத்ரீனா கைஃப் டைகர் 3 படத்தில் நடித்த காட்சியை டீப் ஃபேக் டெக்னாலஜி மூலம் ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டனர். இப்படி நடிகைகளின்


மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு நோட்டீஸ்

2024-05-30 06:11:21 - 2 days ago

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு நோட்டீஸ் பி.பி.டி.சி.எல். நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-தி பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் லிமிடெட்-ன் (பி.பி.டி.சி.எல்.) மாஞ்சோலை, மணிமுத்தாறு மற்றும் ஊத்து தேயிலைத் தோட்டம் மற்றும் தேயிலை தொழிற்சாலைகளை உள்ளடக்கிய சிங்கம்பட்டி குரூப்பில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் இதன் மூலம் அறிவிப்பது என்னவென்றால், சிங்கம்பட்டி குரூப்பின் வணிகத்தை நிலைதிருத்தமான முறையில் மேலாண்மை செய்வதற்கு உதவ பி.பி.டி.சி.எல். வெளிப்படுத்தும்


நெல்லை எக்ஸ்பிரசில் ரூ.4 கோடி பறிமுதல்: பா.ஜ.க. மூத்த தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன்

2024-05-29 02:42:40 - 3 days ago

நெல்லை எக்ஸ்பிரசில் ரூ.4 கோடி பறிமுதல்: பா.ஜ.க. மூத்த தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலின்போது பறக்கும்படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.அந்த வகையில் கடந்த மாதம் 6ம் தேதி சென்னையில் இருந்து நெல்லைக்கு ரெயிலில் பணம் கொண்டு செல்லப்படுவதாக தேர்தல் பறக்கும்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சென்னை எழுப்பூரில் இருந்து புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ்


இந்திய அணியின் பயிற்சியாளராகிறார் கவுதம் கம்பீர் : வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

2024-05-29 02:41:07 - 3 days ago

இந்திய அணியின் பயிற்சியாளராகிறார் கவுதம் கம்பீர் : வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!! ராகுல் டிராவிட் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியுடன் அவரது ஒப்பந்தம் முடிவடைந்தது. இருப்பினும் ஜூன் 1-ந் தேதி தொடங்கும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியை கருத்தில் கொண்டு அவரது


கள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை!

2024-05-26 01:11:27 - 6 days ago

கள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை! சென்னை, சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. சன்ரைசர்ஸ் ஐதராபாத்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டிக்கான 'டிக்கெட்' மைதானத்தின் வெளியே கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக திருவல்லிக்கேணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கள்ளச்சந்தையில் விற்பனை


ரவுடி கொலையில் சாதிய மோதலை தூண்டிவிட பா.ரஞ்சித் முயற்சி…!

2024-05-25 08:03:01 - 1 week ago

ரவுடி கொலையில் சாதிய மோதலை தூண்டிவிட பா.ரஞ்சித் முயற்சி…! சாதிய மோதலை தூண்டிவிட முயற்சித்ததாக இயக்குநர் பா.ரஞ்சித் மீது பரமக்குடி போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நெல்லை – மூன்றடைப்பு அருகே உள்ள வாகைக்குளம் பகுதியை சோ்ந்த தீபக்ராஜா (30). இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பதால், ரவுடி பட்டியலில் சேர்த்து தொடர்ந்து அவரை போலீசார் கண்காணித்து


சவுக்கு சங்கர் கைது சரியே..! டிடிவி தினரகன்

2024-05-25 07:30:23 - 1 week ago

சவுக்கு சங்கர் கைது சரியே..! டிடிவி தினரகன் தமிழ்நாடு அரசு சவுக்கு சங்கரை கைது செய்திருப்பது தவறில்லை என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் இன்று நடைபெறும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகியின் இல்லத் திருமண விழாவிற்காக நேற்று வருகை தந்த அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தேனி பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளருமான டிடிவி தினகரன் அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம்