Tamil News & POLLING

 

நான் மத்திய அமைச்சராகும் வாய்ப்பைப் பறித்தவர் எடப்பாடி பழனிசாமி..! - ரவீந்திரநாத் எம்.பி தாக்கு

1 year ago 28 மார்ச் 2024 03:13 AM | views : 164
தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், சிட்டிங் எம்.பி ரவீந்திரநாத் உடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதையடுத்து தேனி பழனிசெட்டிபட்டி அருகே செய்தியாளர்களைச் சந்தித்த ரவீந்திரநாத், ``தற்போதுள்ள காலகட்டத்தில் ஓ.பி.எஸ் மற்றும் டி.டி.வி ஆகிய தலைவர்கள் களத்தில் வெற்றி பெற்றால்தான், அ.தி.மு.க காப்பாற்றப்படும் என்பதால், இந்தத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை.

வாய்ப்பு இருந்தால் அடுத்து வரும் தோதலில் போட்டியிடுவேன். மேலும் டி.டி.வி.தினகரன் பல்வேறு உதவிகளை இங்கு செய்துள்ளவர், அனைவருக்கும் பரிச்சயமானவர். நானும் அவரும் வேறு வேறு இல்லை.

ராமநாதபுரத்தில் ஓ.பி.எஸ், தேனியில் டி.டி.வி.தினகரன் ஆகியோர் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள். `ஓ.பி.எஸ்., தாத்தா...' என குழந்தைகள்கூட அன்போடு அழைக்கும் முகத்திற்குச் சொந்தக்காரர் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பழுத்த அரசியல் அனுபவம் பெற்றவர்.

எடப்பாடி பழனிசாமி தரப்பினர்தான் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காவே, ராமநாதபுரத்தில் அவர் பெயரிலேயே பல வேட்பாளர்களை போட்டியிட மனு செய்ய வைத்துள்ளனர். அந்த குழப்பத்திற்கு வேட்பு மனு பரிசீலனையிலேயே உண்மை நிலை தெரிந்துவிடும். எடப்பாடி பழனிசாமி சுயநலத்தால் கட்சியை அபகரித்துக் கொண்டார். மேலும், நான் மத்திய அமைச்சராகும் வாய்ப்பு அவரால்தான் பறிபோனது. போடி தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தால், நான் போட்டியிட வாய்ப்பு உள்ளது" என்றார்.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக TVK அண்ணாமலை BJP தவெக ANNAMALAI AMMK பாராளுமன்ற தேர்தல் ADMK AIADMK காங்கிரஸ் டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமி TTV DHINAKARAN TAMIL NADU MK STALIN உதயநிதி ஸ்டாலின் ANBUMANI RAMADOSS தமிழக வெற்றிக் கழகம் முக ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் தமிழகம் UDHAYANIDHI STALIN கனமழை ரஜினிகாந்த் CONGRESS PMK இந்திய அணி சீமான் பாமக INDIAN CRICKET TEAM கொலை PARLIAMENT ELECTION அன்புமணி ராமதாஸ் பிரதமர் மோடி வடகிழக்கு பருவமழை EDAPPADI PALANISWAMI தீபாவளி KEERTHY SURESH COIMBATORE அமமுக சட்டசபை தேர்தல் கைது கோவை நெல்லை மதுரை NELLAI தென்காசி ஓபிஎஸ் கள்ளக்காதல் THIRUMAVALAVAN AJITH திருநெல்வேலி திருமாவளவன் SEEMAN TAMILAGA VETTRI KAZHAGAM TAMIL ACTRESS தமிழ்நாடு விடுமுறை வானிலை ஆய்வு மையம் திருப்பரங்குன்றம் ELECTION COMMISSION ASSEMBLY ELECTIONS மழை அஜித் வன்னியர் நடிகை தமிழக அரசு தேவர் MADURAI டிரெண்டிங் THOOTHUKUDI பாலியல் தொல்லை NORTHEAST MONSOON டாப் நியூஸ் கீர்த்தி சுரேஷ் 2024 T20 WORLDCUP OPS