Tamil News & POLLING

 

பிளவுவாத அரசியலை முன்னிறுத்தி செயல்படுத்தப்படும் சிஏஏ ஏற்கத்தக்கது அல்ல: விஜய்

2 years ago 12 மார்ச் 2024 02:40 AM | views : 138
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில், பிளவுவாத அரசியலை முன்னிறுத்திச் செயல்படுத்தப்படும் இந்திய குடியுரிமை திருச்சச் சட்டம் 2019 (CAA) போன்ற எந்த சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல.

தமிழ்நாட்டில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும்.இவ்வாறு விஜய் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.கடந்த 1955-ம் ஆண்டு குடியுரிமை சட்டம் கொண்டுவரப்பட்டது. அதில் திருத்தங்கள் செய்து, கடந்த 2019-ம் ஆண்டு குடியுரிமை திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது.இதன்படி பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத அடக்குமுறைக்கு உள்ளாகி, அங்கிருந்து 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதிக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய இந்து, கிறிஸ்தவர், சீக்கியர், சமணர், பார்சிகள், பவுத்தர்கள் ஆகிய சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க இம்மசோதா வகை செய்கிறது.

2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இம்மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி ஒப்புதலையும் பெற்றது.ஜனாதிபதி ஒப்புதல் பெற்று 6 மாதங்களுக்குள் சட்டத்துக்கான விதிமுறைகளை வெளியிட்டால்தான், அச்சட்டம் அமலுக்கு வரும். ஆனால், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சில மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்தன. அவற்றில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

எனவே, விதிமுறைகள் வெளியிடப்படவில்லை. சட்டமும் அமல்படுத்தப்படவில்லை.இதற்கிடையே, குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு உறுதி பூண்டிருப்பதாக கடந்த டிசம்பர் மாதம் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறினார். அதையடுத்து இதற்கான பணிகள் வேகம் எடுத்தன.இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிமுறைகள் நேற்று வெளியிடப்பட்டன. இத்துடன் அச்சட்டம் அமலுக்கு வந்து விட்டதாக மத்திய அரசு அறிவித்தது.

3 நாடுகளில் இருந்து வந்த மேற்கண்ட மதத்தினருக்கு இந்திய குடியுரிமை வழங்கும் பணியை மத்திய அரசு தொடங்கும். இதற்கென பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.எவ்வித ஆவணமும் இல்லாமல், 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்பு வந்தவர்கள் அதில் விண்ணப்பிக்க வேண்டும். எந்த ஆண்டு வந்தனர் என்பதை குறிப்பிட வேண்டும். அவர்களிடம் எந்த ஆவணமும் கேட்கப்படாது என்று மத்திய உள்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK தவெக ANNAMALAI AMMK ADMK TAMIL NADU டிடிவி தினகரன் TTV DHINAKARAN MK STALIN AIADMK காங்கிரஸ் பாராளுமன்ற தேர்தல் எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் ANBUMANI RAMADOSS மு.க.ஸ்டாலின் முக ஸ்டாலின் இந்திய அணி தமிழகம் UDHAYANIDHI STALIN கனமழை ரஜினிகாந்த் PMK பாமக INDIAN CRICKET TEAM சீமான் CONGRESS கொலை பிரதமர் மோடி அன்புமணி ராமதாஸ் KEERTHY SURESH சட்டசபை தேர்தல் கைது EDAPPADI PALANISWAMI அமமுக COIMBATORE கோவை PARLIAMENT ELECTION தீபாவளி வடகிழக்கு பருவமழை SEEMAN மதுரை தமிழ்நாடு AJITH தென்காசி TAMIL ACTRESS நெல்லை NELLAI திருமாவளவன் THIRUMAVALAVAN TAMILAGA VETTRI KAZHAGAM கள்ளக்காதல் திருநெல்வேலி விடுமுறை ஓபிஎஸ் டாப் நியூஸ் கீர்த்தி சுரேஷ் அஜித் தேவர் மழை நடிகை திருப்பரங்குன்றம் டிரெண்டிங் வன்னியர் பாலியல் தொல்லை THOOTHUKUDI NORTHEAST MONSOON தமிழக அரசு OPS ASSEMBLY ELECTIONS ELECTION COMMISSION 2024 T20 WORLDCUP வானிலை ஆய்வு மையம் MADURAI