Tamil News & POLLING

 

குடியை மறந்து ஒரு வருடம் ஆகிறது என்று போஸ்டர் ஒட்டிய இளநீர் வியாபாரி

3 years ago 28 பிப்ரவரி 2023 02:43 AM | views : 164
செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி புவனேஸ்வரி நகர் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 53). இவருக்கு திருமணம் ஆகி 4 மகன்கள் உள்ளனர். அவர் அதே பகுதியில் இளநீர் வியாபாரம் செய்து வருகி்றார்.

கடந்த 30 வருடங்களுக்கு மேலாக மனோகரன் மதுவுக்கு அடிமையாகி இருந்ததும், அடிக்கடி வீட்டில் தகராறு செய்வதும் சம்பாதிக்கும் பணத்தை மது குடித்தே அழித்தார். இந்த நிலையில் கடந்த வருடம் குடிப்பதால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து கவலைப்பட்ட மனோகரன் குடியை நிறுத்த முடிவு எடுத்தார்.மனோகரன் டைரி ஒன்றை எடுத்து அதில் தான் இறுதியாக குடித்த நாளை குறித்து வைத்துள்ளார்.

தொடர்ச்சியாக குடிக்காமல் சுமார் ஒரு வருட காலம் வரை இருந்து வந்துள்ளார். அவ்வப்போது மது குடிக்கும் எண்ணம் தோன்றினால் டீ குடிப்பது, விரும்பிய உணவை சாப்பிடுவது உள்ளிட்டவற்றை செய்ததாக தெரிவித்து இருக்கிறார்.

தான் திருந்தியது போல் அனைவரும் மதுப்பழக்கத்தில் இருந்து திருந்த வேண்டும் என்கிற நோக்கத்தில் குடியை மறந்து முதலாம் ஆண்டு தினம் என போஸ்டர் அடித்து ஊர் முழுவதும் ஒட்டி இருக்கிறார்.

அவரது இந்த செயல் அந்த பகுதியில் மட்டும் அல்லாது சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவி வருகிறது.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK தவெக ANNAMALAI AMMK MK STALIN AIADMK காங்கிரஸ் பாராளுமன்ற தேர்தல் டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமி ADMK TAMIL NADU TTV DHINAKARAN உதயநிதி ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் இந்திய அணி முக ஸ்டாலின் INDIAN CRICKET TEAM ANBUMANI RAMADOSS PMK கனமழை தமிழகம் ரஜினிகாந்த் சீமான் CONGRESS UDHAYANIDHI STALIN பாமக அன்புமணி ராமதாஸ் PARLIAMENT ELECTION பிரதமர் மோடி கைது வடகிழக்கு பருவமழை அமமுக EDAPPADI PALANISWAMI COIMBATORE கோவை கொலை SEEMAN KEERTHY SURESH சட்டசபை தேர்தல் தீபாவளி TAMIL ACTRESS கள்ளக்காதல் தென்காசி THIRUMAVALAVAN NELLAI நெல்லை திருமாவளவன் TAMILAGA VETTRI KAZHAGAM திருநெல்வேலி மதுரை ஓபிஎஸ் தமிழ்நாடு AJITH விடுமுறை THOOTHUKUDI கீர்த்தி சுரேஷ் பாலியல் தொல்லை 2024 T20 WORLDCUP நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றம் வானிலை ஆய்வு மையம் SENGOTTAIYAN வன்னியர் அஜித் ELECTION COMMISSION ASSEMBLY ELECTIONS டாப் நியூஸ் டிரெண்டிங் தமிழக அரசு NORTHEAST MONSOON தேவர் MADURAI OPS