Tamil News & POLLING

 

துணிவு பேனரை விட்டுட்டு வாரிசு பேனருக்கு தடையா? - கோபத்தில் கொந்தளிக்கும் விஜய் ரசிகர்கள்!

3 years ago 25 டிசம்பர் 2022 12:25 PM | views : 157
விஜய்யின் வாரிசு படமும், அஜித்தின் துணிவும் பொங்கலுக்கு வெளியாவதை முன்னிட்டு திரையரங்குகளில் இரண்டு படங்களின் பேனர்களும் வைக்கப்பட்டுள்ளன. இதில் எந்தப் படத்தின் பேனர் பெரிதாக இருக்கிறது என ரசிகர்களிடையே கடும் போட்டி நிலவியது.

இந்த நிலையில் சென்னையின் பிரபல திரையரங்கம் ஒன்றில் வாரிசு பட பேனரை  மூடி மறைக்கப்பட்டிருக்கும் போட்டோவை விஜய் ரசிகர்கள் பகிர்ந்து கேள்வி எழுப்பிவருகின்றனர். மற்றொருபக்கம் அஜித் ரசிகர்கள் அதனை உற்சாகமாக பதிவிட்டுவருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக திரையரங்கம் ட்விட்டரில் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தேவையில்லாத மோதலை தடுக்கவே பேனர் கவரால் மூடப்பட்டது. தற்போது ஸ்பெஷல் ஷோ முடிந்த பிறகு பேனரை மூடிய கவரை நீக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.




இதனையடுத்து விஜய் பட ஸ்பெஷல் ஷோ திரையிடும்போது துணிவு பேனர் மறைக்கப்படுமா என கேள்வி எழுப்பிவருகின்றனர். இரு  படங்களின் வெளியீட்டுக்கு இன்னும் 20 நாட்களுக்கு குறைவாகவே உள்ள நிலையில் விஜய் - அஜித் ரசிகர்களின் மோதல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. படம் வெளியாகும் நாளில் திரையரங்குகளில் கலவரங்கள் ஏற்பட அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக ANNAMALAI MK STALIN AMMK டிடிவி தினகரன் AIADMK ADMK காங்கிரஸ் எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN TAMIL NADU பாராளுமன்ற தேர்தல் தமிழக வெற்றிக் கழகம் மு.க.ஸ்டாலின் முக ஸ்டாலின் இந்திய அணி INDIAN CRICKET TEAM ANBUMANI RAMADOSS கனமழை CONGRESS ரஜினிகாந்த் PMK சீமான் UDHAYANIDHI STALIN தமிழகம் பாமக பிரதமர் மோடி அன்புமணி ராமதாஸ் PARLIAMENT ELECTION தீபாவளி EDAPPADI PALANISWAMI கோவை கைது அமமுக SEEMAN KEERTHY SURESH கொலை COIMBATORE வடகிழக்கு பருவமழை சட்டசபை தேர்தல் திருமாவளவன் நெல்லை கள்ளக்காதல் TAMIL ACTRESS THOOTHUKUDI NELLAI விடுமுறை TAMILAGA VETTRI KAZHAGAM தமிழ்நாடு THIRUMAVALAVAN தென்காசி ஓபிஎஸ் AJITH திருநெல்வேலி மதுரை நயினார் நாகேந்திரன் வன்னியர் NORTHEAST MONSOON டாப் நியூஸ் கீர்த்தி சுரேஷ் டிரெண்டிங் MADURAI அஜித் தேவர் TAMIL CINEMA பாலியல் தொல்லை திருப்பரங்குன்றம் கொரோனா வானிலை ஆய்வு மையம் 2024 T20 WORLDCUP OPS தமிழக அரசு ELECTION COMMISSION ASSEMBLY ELECTIONS SENGOTTAIYAN