Tamil News & POLLING

 

சுவாமிதோப்பில் உதயநிதி ஸ்டாலின் சாமி தரிசனம்!

3 years ago 21 நவம்பர் 2022 04:42 PM | views : 173
சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் பதியில் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் சாமி தரிசனம் செய்துள்ளார்.





கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் பகுதியில் இன்று உலக மீனவர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திமுக இளைஞர் அணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்க, இன்று மதியம்

கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை வந்தடைந்தார். அவருக்கு திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.







பின்னர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில், உதயநிதி ஸ்டாலின் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். சாமிதோப்பு அய்யா வைகுண்டர் திருக்கோயில் சார்பாக அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. சுவாமிதோப்பு பதியின் பள்ளி அறைக்கு சென்ற உதயநிதி, அய்யா வைகுண்டரை தரிசனம் செய்தார். ஆனால் பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்டருக்கு அடையாளமான தலைப்பாகையும் நாமமும் கோவில் நிர்வாகம் சார்பில் உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்படவில்லை.



தரிசனம் செய்த பின்னர், பொதுமக்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், மக்கள் கொடுத்த மனுக்களை பெற்றுக் கொண்டார். தொடர்ந்து உலக மீனவர் தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக TVK அண்ணாமலை BJP தவெக ANNAMALAI ADMK TAMIL NADU MK STALIN எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரன் AMMK AIADMK தமிழக வெற்றிக் கழகம் TTV DHINAKARAN உதயநிதி ஸ்டாலின் காங்கிரஸ் பாராளுமன்ற தேர்தல் ANBUMANI RAMADOSS முக ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் PMK UDHAYANIDHI STALIN கனமழை INDIAN CRICKET TEAM ரஜினிகாந்த் இந்திய அணி பாமக தமிழகம் சீமான் CONGRESS அன்புமணி ராமதாஸ் கொலை பிரதமர் மோடி கைது COIMBATORE EDAPPADI PALANISWAMI அமமுக KEERTHY SURESH கோவை வடகிழக்கு பருவமழை சட்டசபை தேர்தல் PARLIAMENT ELECTION தீபாவளி AJITH விடுமுறை TAMILAGA VETTRI KAZHAGAM THIRUMAVALAVAN TAMIL ACTRESS மதுரை கள்ளக்காதல் திருமாவளவன் ஓபிஎஸ் தமிழ்நாடு நெல்லை தென்காசி SEEMAN திருநெல்வேலி NELLAI MADURAI டிரெண்டிங் தேவர் பாலியல் தொல்லை தமிழக அரசு 2024 T20 WORLDCUP டாப் நியூஸ் வன்னியர் ELECTION COMMISSION THOOTHUKUDI கீர்த்தி சுரேஷ் கொரோனா NORTHEAST MONSOON அஜித் திருப்பரங்குன்றம் வானிலை ஆய்வு மையம் OPS ASSEMBLY ELECTIONS