Tamil News & POLLING

 

ஜெ.வுக்கும் எனக்கும் இடையே உறவு சரியில்லை என ஆணையத்திற்கு எப்படி தெரியும்? சசிகலா கேள்வி

3 years ago 19 அக்டோபர் 2022 03:34 AM | views : 165
ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க, தான் என்றைக்கும் தடையாக இருந்ததில்லை. அன்றைய சூழலில் அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்வதற்கான தேவை ஏற்படவில்லை என எய்ம்ஸ் உள்பட அனைத்து மருத்துவர்களும் தெரிவித்தனர். என்றும் சசிகலா விளக்கம் அளித்துள்ளார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போல ஜெயலலிதாவின் மருத்துவ சிகிச்சையில் ஒருபோதும் தான் தலையிட்டதில்லை என சசிகலா கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் விரிவாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில், 2012ஆம் ஆண்டு முதல் ஜெயலலிதாவுக்கும் தனக்கும் இடையிலான உறவு சரியில்லை என ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எப்படி தெரியும்? பொய்யான, அபத்தமான கருத்தை ஆணையம் தெரிவிக்க யார் காரணம், யாருடைய அரசியல் லாபத்திற்காக வெளியிடப்பட்டிருக்கும் என்பதை மக்கள் பார்வைக்கே விட்டுவிடுகிறேன்.


ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க நான் என்றைக்கும் தடையாக இருந்ததில்லை. என் மீது சொல்லப்படுகின்ற குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுக்கிறேன். ஜெயலலிதாவின் மரணத்தை அரசியலாக்கி வேடிக்கை பார்க்கும் அற்பத்தனமான நிலையை இனிமேல் யாரும் ஆதரிக்க மாட்டார்கள்.


எந்தவிதமான பரிசோதனைகள் செய்ய வேண்டும், எந்த மருந்துகள் தர வேண்டும் என்ற முடிவை மருத்துவக் குழுவினரே எடுத்தனர். ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்வது தொடர்பாக, எந்த தேவையும் ஏற்படவில்லை என்று எய்ம்ஸ் உள்பட அனைத்து மருத்துவர்களும் முடிவெடுத்தனர். இது தொடர்பாக எந்தவித விசாரணை நடத்தினாலும் அதனை சந்திக்க தயாராக இருக்கிறேன்.

என்னை அரசியலில் இருந்து ஓரம்கட்ட வேண்டும் என்றால் அதற்கு எத்தனையோ வேறு வழிகளை தேர்ந்தெடுத்து இருக்கலாம். அதற்கு ஜெயலலிதாவின் மரணத்தை சர்ச்சை ஆக்கியது தான் மிகவும் கொடுமையானது. நாங்கள் நட்பிற்கு இலக்கணமாகவே வாழ்ந்தோம். இது இப்பிறவியில் எனக்களித்த பெரும் வரமாக எண்ணுகிறேன்.

ஜெயலலிதாவின் மரணத்தை சர்ச்சையாக்கி, அதற்காக ஒரு விசாரணை ஆணையம் நீதியரசர் ஆறுமுகசாமி அவர்கள் தலைமையில் அமைத்து, அதன் அறிக்கையும் அரசியலாக்கி விட்டார்கள்.

உச்ச நீதிமன்றம் கூட இந்த விவகாரத்தில் 30-11-2021 அன்று `ஆணையத்தின் முன்பாக இருக்கின்ற சாட்சியங்கள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு கொடுத்து இருந்தது. ஆனால் இந்த விசாரணை ஆணையம் தன்னுடய அதிகார வரம்பை மீறி தேவையற்ற அனுமானங்களை சொல்லி என் மீது பழி போட்டு இருப்பது எந்த விதத்தில் நியாயம்? எங்களுடைய உறவு குறித்து இந்த ஆணையம் யாரையோ திருப்திபடுத்தும் எண்ணத்தில், யாருடைய அரசியல் ஆதாயத்திற்கு உதவுகின்ற நோக்கத்தில் இப்படிப்பட்ட தேவையற்ற சர்ச்சைக்குரிய கருத்தை இந்த ஆணையம் தனது அறிக்கையில் குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன?

நானும் ஜெயலலிதாவும் கிட்டத்தட்ட சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அனைவரும் பொறாமைப்படும் அளவுக்கு ஒருவருக்கொருவர் துணையாக ஒரே வீட்டில் வாழ்ந்து இருக்கிறோம். அவரே சொல்வது போல நான் அவருக்கொரு உற்ற சகோதரியாக, உயிர்த் தோழியாக, இன்னும் சொல்லபோனால் அவருக்கு தாயாக இருந்து பாதுகாத்து வந்துள்ளேன்.

இடையிடையே என்னையும் அவரையும் எப்படியாவது பிரித்து அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே நானும் அவரும் சிறிது காலம் பிரித்து இருந்து என்ன நடக்கிறது என்று பார்த்தோம். இந்த சதியின் பின்னணி குறித்து நாங்கள் தெரிந்து கொண்டவுடன் மீண்டும் அவரோடு இருந்து வந்தேன். 2012 முதல் அவருக்கும் எனக்கும் இடையிலான உறவு சரியில்லை என்று ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எப்படி தெரியும்?

யார் இதைப்பற்றி ஆணையத்திடம் சொன்னது? இறந்துபோன ஜெயலலிதா அவர்களும் இவர்களிடத்தில் சொல்லி இருக்க வாய்ப்பில்லை. அப்படி இருக்கும் போது இப்படி ஒரு பொய்யான, அபத்தமான கருத்தை ஆணையம் தெரிவிக்க காரணம் என்ன, அதன் உள்நோக்கம் என்ன? இது யாருடைய அரசியல் லாபத்திற்காக வெளியிடப்பட்டு இருக்கும் என்பதை மக்கள் பார்வைக்கே விட்டு விடுகிறேன் என கூறியுள்ளார்.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக ANNAMALAI AIADMK AMMK MK STALIN ADMK TTV DHINAKARAN எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரன் TAMIL NADU உதயநிதி ஸ்டாலின் ANBUMANI RAMADOSS தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் பாராளுமன்ற தேர்தல் முக ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் தமிழகம் இந்திய அணி UDHAYANIDHI STALIN கனமழை ரஜினிகாந்த் PMK INDIAN CRICKET TEAM சீமான் பாமக CONGRESS கொலை அன்புமணி ராமதாஸ் பிரதமர் மோடி சட்டசபை தேர்தல் கோவை KEERTHY SURESH கைது EDAPPADI PALANISWAMI அமமுக வடகிழக்கு பருவமழை PARLIAMENT ELECTION தீபாவளி COIMBATORE ஓபிஎஸ் தென்காசி மதுரை கள்ளக்காதல் TAMIL ACTRESS தமிழ்நாடு விடுமுறை நெல்லை AJITH THIRUMAVALAVAN SEEMAN திருமாவளவன் திருநெல்வேலி TAMILAGA VETTRI KAZHAGAM NELLAI பாலியல் தொல்லை கீர்த்தி சுரேஷ் 2024 T20 WORLDCUP டிரெண்டிங் திருப்பரங்குன்றம் டாப் நியூஸ் மழை அஜித் வன்னியர் NORTHEAST MONSOON MADURAI தமிழக அரசு வானிலை ஆய்வு மையம் தேவர் OPS ELECTION COMMISSION ASSEMBLY ELECTIONS THOOTHUKUDI