Tamil News & POLLING

 

அடுத்த மதத்தை தாழ்த்தாதீங்க – நடிகர் சந்தானம் | Santhanam talks about Jai Bhim issue

4 years ago 17 நவம்பர் 2021 03:11 PM | views : 184
சந்தானம் நாயகனாக நடித்துள்ள ‘சபாபதி’ திரைப்படம் நவம்பர் 19ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நவம்பர் 16 மாலை சென்னை வடபழனி கமலா தியேட்டரில் நடைபெற்றது.

அப்போது நடிகர் சந்தானத்திடம் ஜெய் பீம் சர்ச்சை குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு சந்தானம் பதிலளிக்கையில்.. “ஜெய் பீம் படமாக இருந்தாலும் எந்த படமாக இருந்தாலும் ஒரு மதம் பற்றி உயர்வாக பேசலாம். ஆனால் அடுத்த மதம் குறித்து இழிவாக பேசக்கூடாது-

உதாரணமாக நாம் இந்துக்களை பற்றி பேசுகிறோம் என்றால், எவ்வளவு உயர்த்தியும் பேசலாம். ஆனால், கிறிஸ்தவ மதம் பற்றி தாழ்வாக பேசக் கூடாது. அடுத்தவர்களை காயப்படுத்த கூடாது.

ஏனென்றால், சினிமா என்பது ஒரு இரண்டு மணி நேர பொழுதுபோக்கு.

எல்லா மதத்தினரும், சாதியினரும் தியேட்டர்களில் ஒன்றாக அமர்ந்து படம் பார்க்கிறோம். எனவே சாதி மதம் என்பது தேவையில்லாத விஷயம்.

சாதி மத கவலைகளை மறந்து தான் தியேட்டருக்கு வருகிறோம். எனவே சமுதாயத்திற்கு நல்ல சினிமாவை தர வேண்டும்..” என்றார்.

‘சபாபதி’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது. இப்படத்தை, அறிமுக இயக்குநர் ஸ்ரீனிவாச ராவ் இயக்க, சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

சபாபதி படத்தில் சந்தானம் ஜோடியாக ப்ரீத்தி வர்மா நடித்துள்ளார். சந்தானத்தின் நண்பனாக புகழ் நடித்துள்ளார். இவர்களுடன் எம்எஸ் பாஸ்கர், டிக்கிலோனா புகழ் மாறன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

அப்பா, மகனுக்கிடையேயான பாசத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இதில் திக்கு வாய் கேரக்டரில் சந்தானம் நடித்துள்ளார்.

தற்போது இந்த படத்தின் 2வது ஸ்னீக்பீக் வீடியோ வெளியாகியுள்ளது. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தானம் நடிப்பில் ‘சர்வம் சுந்தரம்’, ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகவுள்ளன.


இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK தவெக ANNAMALAI MK STALIN AMMK எடப்பாடி பழனிசாமி ADMK பாராளுமன்ற தேர்தல் டிடிவி தினகரன் காங்கிரஸ் உதயநிதி ஸ்டாலின் TAMIL NADU TTV DHINAKARAN AIADMK மு.க.ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் ANBUMANI RAMADOSS இந்திய அணி INDIAN CRICKET TEAM முக ஸ்டாலின் கனமழை சீமான் ரஜினிகாந்த் CONGRESS PMK UDHAYANIDHI STALIN பாமக தமிழகம் PARLIAMENT ELECTION பிரதமர் மோடி அன்புமணி ராமதாஸ் சட்டசபை தேர்தல் SEEMAN கைது வடகிழக்கு பருவமழை கொலை COIMBATORE EDAPPADI PALANISWAMI அமமுக தீபாவளி கோவை KEERTHY SURESH ஓபிஎஸ் தமிழ்நாடு NELLAI தென்காசி நெல்லை THIRUMAVALAVAN கள்ளக்காதல் திருமாவளவன் TAMIL ACTRESS திருநெல்வேலி TAMILAGA VETTRI KAZHAGAM AJITH மதுரை விடுமுறை THOOTHUKUDI நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றம் MADURAI கொரோனா தேவர் ASSEMBLY ELECTIONS தமிழக அரசு OPS TAMIL CINEMA அஜித் வானிலை ஆய்வு மையம் டிரெண்டிங் SENGOTTAIYAN கீர்த்தி சுரேஷ் டாப் நியூஸ் 2024 T20 WORLDCUP வன்னியர் பாலியல் தொல்லை ELECTION COMMISSION NORTHEAST MONSOON