Tamil News & polling
சுந்தர் சி இயக்கத்தில் விஷால் , சந்தானம் , அஞ்சலி , வரலட்சுமி நடித்துள்ள மதகஜராஜா படத்தின் டிரைலர் வெளியாகி 12 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது
சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்து கடந்த 2012 ஆம் தொடங்கப்பட்ட படம் மதகஜராஜா. சந்தானம் , அஞ்சலி , வரலக்ஷ்மி , உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். விஜய் ஆண்டனி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மதகஜராஜா படத்தின் படப்பிடிப்பு கடந்த 2013 ஆம் ஆண்டு முடிவடைந்தது. ஆனால் இப்படத்தின் தயாரிப்பாளருக்கு இருந்த பொருளாதார பிரச்சனைகளால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இப்படத்தில் நடிகர் விஷால் பாடிய மை டியர் லவ்வர் என்கிற பாடல் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. தற்போது கிட்டதட்ட 12 ஆண்டுகள் கழித்து இப்படம் வரும் பொங்கலுக்கு ஜனவரி 12 ஆம் தேதி வெளியாக இருப்பதாக உறுதிபடுத்தப் பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 12 ஆண்டுகள் முன்பாக யூடியூபில் வெளியான இப்படத்தின் டிரைலர் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் Vijay DMK சென்னை Chennai திமுக TVK தவெக அண்ணாமலை Annamalai அதிமுக பாஜக கனமழை BJP தமிழக வெற்றிக் கழகம் Tamil Nadu TTV Dhinakaran MK Stalin எடப்பாடி பழனிசாமி ADMK திருமாவளவன் AIADMK மு.க.ஸ்டாலின் AMMK தமிழ்நாடு Thirumavalavan அன்புமணி ராமதாஸ் டிடிவி தினகரன் செங்கோட்டையன் Anbumani Ramadoss சீமான் முக ஸ்டாலின் Sengottaiyan PMK Seeman வடகிழக்கு பருவமழை Edappadi Palaniswami Tamilaga Vettri Kazhagam பாமக சட்டசபை தேர்தல் Congress