Tamil News & POLLING

 

ind vs pak: டி20 உலகக்கோப்பை : இந்தியாவுக்கு எதிராக வலிமையான அணியை இறக்கிய பாகிஸ்தான்!

4 years ago 24 அக்டோபர் 2021 11:43 AM | views : 162
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. பாகிஸ்தான் வீரர்கள் விபரம் நேற்று அறிவிப்பட்டது.


தங்களது பலம் பேட்டிங் என்று பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் ( Babar Azam ) தெரிவித்துள்ளார்.7வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. முதல் சுற்று முடிவில் சூப்பர் 12 சுற்றுக்கான குரூப் ஒன்றில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகளும், குரூப்-2-ல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமிபியா ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன.இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. பொதுவாக இந்தியா- பாகிஸ்தான் மோதும் ஆட்டங்களுக்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கும். அந்த வகையில் இன்றைய ஆட்டத்தை காண இருநாட்டு ரசிகர்கள் மட்டுமல்லாது சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.இந்தியாவுக்கு எதிராக ஆடும் பாகிஸ்தான் அணிநேற்று அறிவிக்கப்பட்டது. பாபர் ஆசாம் (c) முகமது ரிஸ்வான் (wk), ஃபகார் ஜமான், ஹைதர் அலி, முகமது ஹபீஸ், சோயிப் மாலிக், ஆசிப் அலி, ஷதாப் கான் (vc), இமாத் வாசிம், ஹசன் அலி, ஷாஹீன் அஃப்ரிடி மற்றும் ஹாரிஸ் ரவுப் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

இன்றைய ஆட்டம் தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம், எங்கள் முக்கிய பலம் பேட்டிங் என்று நான் நினைக்கிறேன். கடந்த இரண்டு மாதங்களாக எங்கள் பேட்ஸ்மென் செயல்பட்டு வரும் விதம், எங்கள் பேட்டிங் காரணமாக நாங்கள் சில நல்ல முடிவுகளைத் தருவோம். மேலும் ஃபீல்டிங்கிலும் சிறப்பாகச் செயல்படுவோம் என்று நம்புகிறேன் என குறிப்பிட்டார். கடந்த காலங்களில் இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் சிறப்பாக செயல்படாதது தொடர்பாக பேசும்போது, கடந்த காலத்தில் நாங்கள் செய்ததை மறந்துவிட்டோம், எதிர்காலத்தில் கவனம் செலுத்த முயற்சிக்கிறோம். இந்தப் போட்டியில் களத்தில் சிறப்பாக செயல்பட முயற்சிப்போம் மேலும் சிறந்த முடிவுகளை உருவாக்க முயற்சிப்போம் என்று கூறினார்.இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு இந்தியா- பாகிஸ்தான் இடையேயான ஆட்டம் தொடங்குகிறது.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK தவெக ANNAMALAI AMMK TAMIL NADU MK STALIN பாராளுமன்ற தேர்தல் ADMK TTV DHINAKARAN AIADMK டிடிவி தினகரன் காங்கிரஸ் உதயநிதி ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி மு.க.ஸ்டாலின் ANBUMANI RAMADOSS PMK முக ஸ்டாலின் INDIAN CRICKET TEAM UDHAYANIDHI STALIN இந்திய அணி சீமான் தமிழகம் கனமழை தமிழக வெற்றிக் கழகம் பாமக ரஜினிகாந்த் CONGRESS PARLIAMENT ELECTION கொலை பிரதமர் மோடி அன்புமணி ராமதாஸ் கைது KEERTHY SURESH தீபாவளி அமமுக EDAPPADI PALANISWAMI கோவை வடகிழக்கு பருவமழை சட்டசபை தேர்தல் SEEMAN COIMBATORE THIRUMAVALAVAN மதுரை கள்ளக்காதல் TAMIL ACTRESS தென்காசி AJITH நெல்லை திருநெல்வேலி தமிழ்நாடு NELLAI ஓபிஎஸ் திருமாவளவன் TAMILAGA VETTRI KAZHAGAM விடுமுறை அஜித் திருப்பரங்குன்றம் MADURAI டிரெண்டிங் டாப் நியூஸ் கீர்த்தி சுரேஷ் நாடாளுமன்ற தேர்தல் NORTHEAST MONSOON வன்னியர் நடிகை ELECTION COMMISSION THOOTHUKUDI நயினார் நாகேந்திரன் தேவர் வானிலை ஆய்வு மையம் 2024 T20 WORLDCUP ASSEMBLY ELECTIONS தமிழக அரசு OPS