Tamil News & POLLING

 

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு

4 years ago 18 அக்டோபர் 2021 02:38 AM | views : 173
முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அதன்படி தற்போது முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகின்றது.



சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருச்சி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் 43 இடங்களில் அதிரடி சோதனை நடைபெறுகிறது. விராலிமலை அருகே இலுப்பூரில் மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் விஜயபாஸ்கருக்கு (C VijayaBaskar) சொந்தமான இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு (Income Tax Raid) போலீஸ் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.



முன்னதாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வீரமணி உள்ளிட்டோர் மீது சோதனை நடத்தப்பட்டது தெரிந்துதே. அதன்படி தற்போது சி.விஜயபாஸ்கர் மீது சோதனை நடத்தப்படுகிறது.



நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அரசு வெற்றி பெற்றதை அடுத்து சில அதிரடி முடிவுகளை திமுக அரசு அவ்வபோது வெளியிட்டு வருகிறது. இதற்கிடையில் அதிமுக ஆட்சியில் சொத்து குவித்ததாக முன்னாள் அமைச்சர்கள் சிலர் குறி வைக்கப்பட்டுள்ளனர்.



அதன்படி முதல் படியாக முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டப்பட்டு அவரிடமிருந்து நிறைய ஆவணங்களும், கணக்கில் வராத பணமும் கைப்பற்றப்பட்டது. அடுத்ததாக அதிமுக முகமாக இருந்த முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் ரெய்டு நடந்தது. இவரிடமிருந்து விலை உயர்ந்த கார்கள், வெளிநாட்டு கரன்சிகள், நகைகள் என பல கோடி மதிப்புள்ள பொருட்கள் அங்கு பறிமுதல் செய்யப்பட்டன.



இந்த நிலையில் தற்போது முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது ரெய்டு நடந்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் அவர் மீது நடந்து வரும் இந்த சோதனையில், அவருக்கு சொந்த நிறுவனங்கள், வீடுகள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளிலும், அலுவலகங்களிலும் சோதனை நடந்து வருகிறது.





இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK தவெக ANNAMALAI AMMK TTV DHINAKARAN காங்கிரஸ் டிடிவி தினகரன் AIADMK TAMIL NADU MK STALIN பாராளுமன்ற தேர்தல் ADMK உதயநிதி ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி ANBUMANI RAMADOSS தமிழக வெற்றிக் கழகம் INDIAN CRICKET TEAM முக ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் இந்திய அணி ரஜினிகாந்த் கனமழை UDHAYANIDHI STALIN CONGRESS PMK சீமான் தமிழகம் பாமக பிரதமர் மோடி அன்புமணி ராமதாஸ் கொலை கைது PARLIAMENT ELECTION COIMBATORE KEERTHY SURESH தீபாவளி SEEMAN வடகிழக்கு பருவமழை சட்டசபை தேர்தல் அமமுக கோவை EDAPPADI PALANISWAMI TAMIL ACTRESS விடுமுறை மதுரை TAMILAGA VETTRI KAZHAGAM திருமாவளவன் நெல்லை THIRUMAVALAVAN திருநெல்வேலி தமிழ்நாடு ஓபிஎஸ் NELLAI தென்காசி AJITH கள்ளக்காதல் OPS கீர்த்தி சுரேஷ் திருப்பரங்குன்றம் தமிழக அரசு தேவர் டிரெண்டிங் NORTHEAST MONSOON டாப் நியூஸ் அஜித் 2024 T20 WORLDCUP வன்னியர் MADURAI ASSEMBLY ELECTIONS வானிலை ஆய்வு மையம் நயினார் நாகேந்திரன் THOOTHUKUDI ELECTION COMMISSION