POLLING FLAMES

 

மே மாதம் மகளிர் உரிமைத் தொகை வருமா?

1 hour ago 29 ஏப்ரல் 2026 07:57 AM | views : 6

தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் பயனாளிகளுக்கு மே மாத தொகை கிடைக்குமா என்ற கேள்வி பெண்கள் மத்தியில் எழுந்துள்ளது.நாட்டிலேயே முதல்முறையாக பெண்களுக்கு ரூ. 1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு 2023 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.இந்த திட்டத்தின் பயனாளிகள் எண்ணிக்கை 1.14 கோடியாக இருந்த நிலையில், புதிதாக திருமணமாகி ரேஷன் அட்டை பெற்றவர்கள், விடுபட்டவர்கள் உள்ளிட்டோர் கடந்தாண்டு சேர்க்கப்பட்டு தற்போது 1.31 கோடி பேர் பயனடைந்து வருகிறார்கள்.


இந்த நிலையில், தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகை விடுவிக்க முடியாத என்ற காரணத்தினால், பிப்ரவரி மாதமே அனைத்து கணக்குகளிலும் ரூ. 5,000 வரவு வைக்கப்பட்டது.பிப்ரவரி மாதத்துக்கான ரூ. 1,000 பணத்துடன், மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களுக்கு முன்பணமாக ரூ. 2,000 மற்றும் கோடைக்கால சிறப்பு தொகுப்பாக ரூ. 2,000 என மொத்தம் ரூ. 5,000 வழங்கப்பட்டது.


இந்த நிலையில், மே மாதத்துக்கான மகளிர் உரிமைத் தொகை பெண்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படுமா? என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.மே 6 வரை தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், அதன்பின்னரே மகளிர் உரிமைத் தொகை பற்றிய அறிவிப்பு வெளியாகும்.திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் மே இரண்டாம் வாரத்தில் மகளிர் உரிமைத் தொகையை வழக்கம்போல் விநியோகிக்கும்.


ஆனால், வேறு கட்சிகள் ஆட்சி அமைக்கும் பட்சத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகே மகளிர் உரிமைத் தொகை பற்றிய அறிவிப்புகள் வெளியாகும்.தேர்தலில் வெற்றி பெற்றும் மீண்டும் ஆட்சி அமைத்தால் மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000 ஆக உயர்த்தப்படும் என்று திமுகவும், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் குல விளக்குத் திட்டத்தில் ரூ. 2,000 வழங்குவோம் என்று அதிமுகவும், ரூ. 2,500 வழங்குவோம் என்று தவெகவும் வாக்குறுதி அளித்துள்ளன.


இந்த நிலையில், புதிய அரசுகள் பதவியேற்கும் பட்சத்தில் அவர்களின் திட்டங்களுக்கு அமைச்சரவையில் ஒப்புதல் பெற்று, தாமதமாகவே விடுவிக்கப்படும்.திமுக அரசே பொறுப்பேற்றாலும் உடனடியாக ரூ. 2,000 ஆக உயர்த்தப்படாது. ஏற்கெனவே விநியோகிக்கப்படும் ரூ. 1,000 தான் மே மாதத்துக்கு வழங்கப்படும்.



மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக TVK ANNAMALAI ADMK AMMK தவெக உதயநிதி ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரன் TAMIL NADU TTV DHINAKARAN MK STALIN பாராளுமன்ற தேர்தல் PMK மு.க.ஸ்டாலின் ANBUMANI RAMADOSS UDHAYANIDHI STALIN பாமக AIADMK கனமழை ரஜினிகாந்த் தமிழகம் காங்கிரஸ் இந்திய அணி தமிழக வெற்றிக் கழகம் முக ஸ்டாலின் அன்புமணி ராமதாஸ் PARLIAMENT ELECTION கொலை கோவை CONGRESS திருமாவளவன் INDIAN CRICKET TEAM சீமான் EDAPPADI PALANISWAMI அமமுக வன்னியர் OPS கைது COIMBATORE KEERTHY SURESH TAMILAGA VETTRI KAZHAGAM சூர்யா மதுரை BIGG BOSS TAMIL SURIYA தமிழ்நாடு ஓபிஎஸ் சட்டசபை தேர்தல் பிரதமர் மோடி வடகிழக்கு பருவமழை NELLAI தேவர் THIRUMAVALAVAN AJITH நெல்லை TAMIL ACTRESS விடுமுறை தூத்துக்குடி தமிழக சட்டசபை தேர்தல் கள்ளக்காதல் RAJINIKANTH அன்புமணி தென்காசி கீர்த்தி சுரேஷ் திருப்பரங்குன்றம் CSK அஜித் கொரோனா ELECTION COMMISSION தீபாவளி