எங்களுக்கு இதெல்லாம் தெரியாது: பதிலுரையில் முதலமைச்சர் விஜய் காட்டம்
தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் விஜய் இன்று பதிலளித்து வருகிறார். அப்போது அவர் பேசியதாவது:
த.வெ.க. ஆட்சியில் செய்யப்பட்ட நலத்திட்டங்களை முதலமைச்சர் விஜய் பட்டியலிட்டார்.
சிங்கப்பெண் சிறப்பு படை, குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு, மின்துறையில் மாற்றங்கள் செயல்படுகிறது, பல குவாரிகள் சீல் வைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. மத்திய அரசு 2 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜல்ஜீவன் நிதியை கேட்டு பெற்றுள்ளோம். ஊழலில்லாத, பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சியை கொடுப்போம்.
எங்களுக்கு மக்கள் பணி செய்ய தெரிந்த அளவுக்கு ஊழல் செய்ய தெரியாது.
தவெக எம்எல்ஏக்களுக்கு மக்கள் பணத்தை சுருட்டத் தெரியாது.
பதவி உயர்வுக்கும், பணியிட மாற்றத்திற்கும் பணம் வாங்க தெரியாது.
கோவில் பணத்தை கொள்ளையடிக்க தவெக எம்எல்ஏக்களுக்கு தெரியாது.
அரசு பணத்தை தனிப்பட்ட கஜானாவுக்கு தவெகவிற்கு மாற்ற தெரியாது.
தங்கத்தை உருக்கி விற்க தெரியாது.
நம் வீட்டு பெண்களை மதிக்க தெரிந்த எங்களுக்கு ஓசி பஸ், ரூ.1000 கேஸ் என பேச தெரியாது என தெரிவித்தார்.
பகிரவும்: