Tamil News & POLLING

 

முடிவுக்கு வருமா ஈரான் - அமெரிக்கா போர்?: சனிக்கிழமை பேச்சுவார்த்தை - டிரம்ப் அறிவிப்பு

2 hours ago 23 மார்ச் 2026 05:44 PM | views : 18
ஈரானுடன் சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக டிரம்ப் கூறி இருக்கிறார். ஈரான் மீதான தாக்குதலை 5 நாட்கள் நிறுத்துவதாக ஆறிவித்த நிலையில் டிரம்ப் இதனை தெரிவித்துள்ளார்.

மேற்காசிய மோதலின் ஒரு பகுதியாக ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

ஈரானும் பதிலுக்கு அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் தளங்கள் அமைந்த பகுதிகள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தியது. போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா, சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகளும், ஐ.நா., உலக சுகாதார அமைப்பு போன்ற சர்வதேச அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன.

Also Readஈரான் அணு உலை மீது 5 நாட்களுக்கு தாக்குதல் இல்லை: டிரம்ப் திடீர் அறிவிப்புஆனால், 3 வாரங்களுக்கும் மேலாக மோதல் நடந்து வருகிறது. இதற்கிடையில், ஈரான் அணு உலைகள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் அனைத்து ராணுவ தாக்குதல்களும் 5 நாட்களுக்கு ஒத்திவைக்கபடுவதாக டிரம்ப் இன்று அறிவித்தார்.

இந்நிலையில், ஈரானுடன் சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக டிரம்ப் கூறி இருக்கிறார். அவர் கூறுகையில், ’ஈரானுடன் விரைவில் உடன்படிக்கை ஏற்படும். சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். ஹார்முஸ் நீரிணை பாதை விரைவில் திறக்கப்படும். ஈரான் மீது நடைபெறும் தாக்குதல் ராணுவ நடவடிக்கையே தவிர போர் அல்ல. ஈரான் அணு ஆயுதங்களை பயன்படுத்தாது என உத்தரவாதம் அளித்துள்ளது. அமெரிக்காவும் ஈரானும் சேர்ந்து ஹார்முஸ் நீரிணை பாதுகாப்போம் ’ என்றார். இதனைத்தொடர்ந்து, ஈரான் - அமெரிக்க போர் முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK விஜய் திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக TVK அண்ணாமலை BJP தவெக ANNAMALAI MK STALIN AIADMK TAMIL NADU ADMK AMMK டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமி TTV DHINAKARAN உதயநிதி ஸ்டாலின் காங்கிரஸ் மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் தமிழக வெற்றிக் கழகம் முக ஸ்டாலின் ANBUMANI RAMADOSS INDIAN CRICKET TEAM கனமழை இந்திய அணி PMK தமிழகம் ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN சீமான் பாமக CONGRESS கைது கொலை பிரதமர் மோடி PARLIAMENT ELECTION அன்புமணி ராமதாஸ் KEERTHY SURESH தென்காசி அமமுக வடகிழக்கு பருவமழை EDAPPADI PALANISWAMI கோவை COIMBATORE திருமாவளவன் மதுரை சட்டசபை தேர்தல் விடுமுறை தீபாவளி தமிழ்நாடு AJITH நெல்லை NELLAI திருநெல்வேலி ஓபிஎஸ் TAMIL ACTRESS SEEMAN THIRUMAVALAVAN OPS TAMILAGA VETTRI KAZHAGAM திருப்பரங்குன்றம் அஜித் வன்னியர் டிரெண்டிங் டாப் நியூஸ் கள்ளக்காதல் 2024 T20 WORLDCUP THOOTHUKUDI தேவர் MADURAI ASSEMBLY ELECTIONS NORTHEAST MONSOON ELECTION COMMISSION கீர்த்தி சுரேஷ் தமிழக அரசு வானிலை ஆய்வு மையம்