Tamil News & POLLING

 

தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணியா? அசோக் தன்வார் என்ன சொல்லியிருக்காருன்னு பாருங்களேன்!

3 months ago 25 நவம்பர் 2025 08:04 AM | views : 174
காங்கிரஸ் கட்சிக்கு மாவட்ட அளவில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர். இதுதொடர்பாக கட்சி நிர்வாகிகளிடம் கருத்து கேட்டு முடிவு செய்யப்பட உள்ளது. இதற்காக மேலிட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் எம்.பி. அசோக் தன்வார் திருப்பூர் வந்தார்.

அவர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் மாநகர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன், தெற்கு மாவட்ட தலைவர் தென்னரசு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து அசோக் தன்வார் நிருபர்களிடம் கூறியதாவது:-

அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வர உள்ளது. அதை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளோம். பீகார் தேர்தலிலிருந்து தமிழக சட்டமன்ற தேர்தல் முற்றிலும் மாறுபாடானது. தமிழக மக்கள் விழிப்புணர்வு மிக்கவர்கள். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக்கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி வைக்குமா? என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு கூட்டணி குறித்து கட்சி தலைமை முடிவெடுக்கும் என்று அசோக் தன்வார் கூறினார்.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை தவெக TVK ANNAMALAI AMMK ADMK AIADMK டிடிவி தினகரன் உதயநிதி ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி TAMIL NADU MK STALIN TTV DHINAKARAN காங்கிரஸ் பாராளுமன்ற தேர்தல் INDIAN CRICKET TEAM முக ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் ANBUMANI RAMADOSS இந்திய அணி தமிழகம் கனமழை UDHAYANIDHI STALIN PMK ரஜினிகாந்த் பாமக சீமான் பிரதமர் மோடி அன்புமணி ராமதாஸ் CONGRESS அமமுக EDAPPADI PALANISWAMI COIMBATORE NELLAI கொலை கைது KEERTHY SURESH சட்டசபை தேர்தல் வடகிழக்கு பருவமழை PARLIAMENT ELECTION தீபாவளி கோவை தென்காசி THIRUMAVALAVAN கள்ளக்காதல் திருமாவளவன் மதுரை நெல்லை விடுமுறை TAMIL ACTRESS திருநெல்வேலி தமிழ்நாடு OPS TAMILAGA VETTRI KAZHAGAM AJITH SEEMAN THOOTHUKUDI ஓபிஎஸ் ASSEMBLY ELECTIONS ELECTION COMMISSION TAMIL CINEMA வானிலை ஆய்வு மையம் டாப் நியூஸ் கொரோனா கீர்த்தி சுரேஷ் வன்னியர் தமிழக அரசு தேவர் திருப்பரங்குன்றம் டிரெண்டிங் MADURAI நடிகை NORTHEAST MONSOON அஜித் 2024 T20 WORLDCUP SENGOTTAIYAN