Tamil News & POLLING

 

கண்களுக்கு விருந்து படைத்த இரட்டை வானவில், வானில் நடந்த அதிசயம்

1 year ago 15 நவம்பர் 2024 04:49 AM | views : 164
சென்னை:

நீல வானம்.. அண்ணாந்து பார்த்து கண்களை ஓடவிடும் கவிஞர்களுக்கு கவிதைகள் படைக்கும் மைதானமாக விளங்கி வருகிறது. கவிஞர் வைரமுத்து தான் எழுதிய முதல் பாடலான "இது ஒரு பொன்மாலை பொழுது.." பாடல் வரிகளிலேயே, "வானம் எனக்கொரு போதிமரம். நாளும் எனக்கது சேதி தரும்" என்று சிலாகித்து இருப்பார்.

நீல வானில், இரவு நேரத்தில் நிலா, நட்சத்திர கூட்டங்கள் அலங்கரித்தாலும், பகல் நேரத்தில் பஞ்சு போன்ற வெண் மேகக் கூட்டங்கள் மட்டுமே காட்சி அளிக்கும். ஆனால், எப்போதாவது தோன்றும் வானவில், வானில் வர்ணஜாலம் காட்டி கண்களுக்கு விருந்து படைப்பது பார்ப்பவர்களுக்கு பரவசத்தை ஏற்படுத்தும். அதுவே, இரட்டை வானவில்லாக தோன்றினால், இரட்டை சந்தோஷம்தான். அப்படியொரு காட்சி நேற்று மாலை சென்னையில் தோன்றி மக்களின் கண்களுக்கு விருந்து படைத்தது.

பொதுவாக வானவில் என்பது மழை பெய்வதற்கு முன்னும், பின்னும் காலை மற்றும் மாலை நேரங்களில் சூரியனுக்கு எதிர் திசையில் தோன்றும். அதாவது, காலையில் மேற்கு திசையிலும், மாலையில் கிழக்கிலும் தோன்றும். நண்பகல் நேரத்தில் வானவில் தோன்றாது.

இனி வானவில் எப்படி தோன்றுகிறது என்பதை பற்றி பார்ப்போம். சூரிய ஒளியானது காற்றில் உள்ள மழைத்துளிகளில் பட்டு ஒளிவிலகல், எதிரொளிப்பு மற்றும் ஒளிச் சிதறல் ஆகிய இயற்பியல் மாற்றங்களுக்கு உள்ளாகி 7 வண்ணங்களாக (ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு) வில்போல் வளைந்து வானவில்லாக தோன்றுகிறது.

இரட்டை வானவில் என்பது, ஒளியானது மழைத்துளியினுள் நுழைந்து வெளியேறும் முன்பு 2 முறை பிரதிபலிப்படையும்போது தோன்றுகிறது. இரட்டை வானவில் தோன்றும்போது இரண்டாவது வானவில்லில் ஊதா நிறம் வெளியேயும், சிவப்பு நிறம் உட்புறமாகவும் இருக்கும்.

அப்படியொரு காட்சியைத்தான் நேற்று சென்னைவாசிகள் தூறிய சாரல் மழைக்கும், மிதமான வெயிலுக்கும் இடையே வானில் கண்டு ரசித்து பரவசம் அடைந்தார்கள்.

இதற்கு முன்பு சென்னையில் இரட்டை வானவில் கடந்த மே 16, ஜூன் 10 ஆகிய தேதிகளிலும், கோவையில் ஜூன் 8-ந் தேதியும், பெங்களூருவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 7-ந் தேதியும் இதேபோல் தோன்றியது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK தவெக ANNAMALAI AMMK காங்கிரஸ் பாராளுமன்ற தேர்தல் ADMK AIADMK டிடிவி தினகரன் TTV DHINAKARAN TAMIL NADU MK STALIN எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் PMK ANBUMANI RAMADOSS மு.க.ஸ்டாலின் முக ஸ்டாலின் CONGRESS தமிழகம் சீமான் இந்திய அணி INDIAN CRICKET TEAM ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN கனமழை பாமக தமிழக வெற்றிக் கழகம் PARLIAMENT ELECTION கொலை கைது பிரதமர் மோடி அன்புமணி ராமதாஸ் KEERTHY SURESH COIMBATORE EDAPPADI PALANISWAMI தீபாவளி வடகிழக்கு பருவமழை SEEMAN சட்டசபை தேர்தல் கோவை அமமுக THIRUMAVALAVAN விடுமுறை திருமாவளவன் AJITH TAMIL ACTRESS திருநெல்வேலி தமிழ்நாடு ஓபிஎஸ் மதுரை NELLAI நெல்லை தென்காசி TAMILAGA VETTRI KAZHAGAM கள்ளக்காதல் 2024 T20 WORLDCUP THOOTHUKUDI OPS நயினார் நாகேந்திரன் டிரெண்டிங் கீர்த்தி சுரேஷ் டாப் நியூஸ் திருப்பரங்குன்றம் அஜித் NORTHEAST MONSOON ASSEMBLY ELECTIONS MADURAI நாடாளுமன்ற தேர்தல் தமிழக அரசு வானிலை ஆய்வு மையம் தேவர் ELECTION COMMISSION நடிகை வன்னியர்