Tamil News & POLLING

 

நேற்று வந்தவர்களை பற்றி எல்லாம் கவலைப்பட தேவையில்லை - மு.க.ஸ்டாலின்?

1 year ago 28 அக்டோபர் 2024 04:37 PM | views : 154
2026 சட்டமன்ற பொதுத்தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க. இப்போதே தயாராகி வருகிறது. அதற்காக தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில் 234 தொகுதிகளுக்கும் சட்டமன்ற தொகுதி பார்வையாளர்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நியமித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தலின்போதும் இதே போல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அந்த பார்வையாளர்களில் 60 சதவீதம் பேர்களை எடுத்து விட்டு இப்போது இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, வழக்கறிஞர் அணி உள்ளிட்ட பல அணிகளில் உள்ளவர்கள் தொகுதி பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவதற்காக அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஒருங்கிணைந்த கூட்டம் நடத்தப்பட்டது.

சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற கடுமையாக பணியாற்ற வேண்டும். வரும் தேர்தலிலும் நாம் தான் வெற்றி பெற உள்ளோம். 234 தொகுதிகள் என்றாலும் நாம் 200 தொகுதிகளை பெற வேண்டும். 234 தொகுதிகளிலும், ஸ்டாலின் தான் வேட்பாளர் என நினைத்து பணியாற்ற வேண்டும். நமது கூட்டணி வலுவாக உள்ளது. கூட்டணி, தொகுதிப் பங்கீடு பற்றி எல்லாம் நீங்கள் கவலைப்பட தேவையில்லை, அதை நான் பார்த்துக் கொள்வேன்" என்று பேசியுள்ளார்.

மேலும், இக்கூட்டத்தில் பேசிய அவர், "நேற்று வந்தவர்களை பற்றி எல்லாம் கவலைப்பட தேவையில்லை, இந்த இயக்கம் இது போன்ற பலரைப் பார்த்துள்ளது" என்று பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கருத்து விஜயை மறைமுகமாக வைத்து அவர் பேசியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக ANNAMALAI MK STALIN AMMK பாராளுமன்ற தேர்தல் AIADMK டிடிவி தினகரன் காங்கிரஸ் எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN ADMK TAMIL NADU மு.க.ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் ANBUMANI RAMADOSS INDIAN CRICKET TEAM முக ஸ்டாலின் இந்திய அணி கனமழை UDHAYANIDHI STALIN சீமான் ரஜினிகாந்த் CONGRESS PMK பாமக தமிழகம் PARLIAMENT ELECTION பிரதமர் மோடி அன்புமணி ராமதாஸ் KEERTHY SURESH அமமுக EDAPPADI PALANISWAMI கொலை தீபாவளி கோவை COIMBATORE கைது வடகிழக்கு பருவமழை சட்டசபை தேர்தல் SEEMAN திருநெல்வேலி தமிழ்நாடு NELLAI TAMIL ACTRESS நெல்லை ஓபிஎஸ் கள்ளக்காதல் TAMILAGA VETTRI KAZHAGAM மதுரை திருமாவளவன் தென்காசி விடுமுறை AJITH THOOTHUKUDI THIRUMAVALAVAN வன்னியர் நயினார் நாகேந்திரன் தேவர் கொரோனா அஜித் கீர்த்தி சுரேஷ் NORTHEAST MONSOON வானிலை ஆய்வு மையம் திருப்பரங்குன்றம் டாப் நியூஸ் MADURAI தமிழக அரசு 2024 T20 WORLDCUP டிரெண்டிங் SENGOTTAIYAN ASSEMBLY ELECTIONS ELECTION COMMISSION TAMIL CINEMA OPS