Tamil News & POLLING

 

தனது வைர வரிகளால் காலம் கடந்தும் வாழ்பவர் கண்ணதாசன்- அண்ணாமலை புகழாரம்

1 year ago 17 அக்டோபர் 2024 09:01 AM | views : 159
சென்னை:

பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

எல்லாச் சூழலுக்கும் பொருந்தும்படியாக, ஆறுதலாக, உத்வேகமாக இருக்கும் தமது வைர வரிகளால், காலங்களைக் கடந்து வாழும் கவியரசர் கண்ணதாசன் நினைவு தினம் இன்று.

கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம், இயேசு காவியம் முதலான நூல்கள், அவரது ஆழ்ந்த இறைபக்தியை விளக்கும். 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், காப்பியங்கள், கட்டுரைகள், சிறுகதைகள் என அவரது எழுத்துக்கள் புகழ்பெற்றவை. ஊடக இதழாசிரியர், தமிழக அரசவைக் கவிஞர், சாகித்ய அகாடமி விருது என, தமது திறமையால் அவர் அடைந்த உயரங்கள் பல.

இறவாப் புகழ் பெற்ற கவியரசர் கண்ணதாசனுக்கு நினைவஞ்சலிகள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK தவெக ANNAMALAI AMMK AIADMK டிடிவி தினகரன் MK STALIN TTV DHINAKARAN ADMK பாராளுமன்ற தேர்தல் காங்கிரஸ் TAMIL NADU உதயநிதி ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி மு.க.ஸ்டாலின் ANBUMANI RAMADOSS தமிழக வெற்றிக் கழகம் முக ஸ்டாலின் PMK இந்திய அணி கனமழை ரஜினிகாந்த் CONGRESS சீமான் INDIAN CRICKET TEAM UDHAYANIDHI STALIN தமிழகம் பாமக கைது அன்புமணி ராமதாஸ் PARLIAMENT ELECTION கொலை பிரதமர் மோடி KEERTHY SURESH COIMBATORE SEEMAN கோவை தீபாவளி EDAPPADI PALANISWAMI அமமுக சட்டசபை தேர்தல் வடகிழக்கு பருவமழை TAMIL ACTRESS THIRUMAVALAVAN திருமாவளவன் TAMILAGA VETTRI KAZHAGAM மதுரை விடுமுறை NELLAI நெல்லை தென்காசி கள்ளக்காதல் AJITH தமிழ்நாடு திருநெல்வேலி ஓபிஎஸ் தமிழக அரசு டிரெண்டிங் வன்னியர் தேவர் OPS நடிகை டாப் நியூஸ் கீர்த்தி சுரேஷ் நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றம் MADURAI 2024 T20 WORLDCUP NORTHEAST MONSOON ASSEMBLY ELECTIONS அஜித் ELECTION COMMISSION வானிலை ஆய்வு மையம் THOOTHUKUDI