Tamil News & POLLING

 

53-வது ஆண்டு தொடக்க விழா: அ.தி.மு.க. தலைமை கழகத்தில் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றி இனிப்பு வழங்கினார்

1 year ago 17 அக்டோபர் 2024 07:32 AM | views : 147
சென்னை:

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். 1972-ம் ஆண்டு அக்டோபர் 17-ந் தேதி அ.தி.மு.க.வை தொடங்கினார். அ.தி.மு.க. தொடங்கப்பட்ட தினத்தை ஒவ்வொரு ஆண்டும் கட்சியினர் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள்.

அந்த வகையில் இன்று அ.தி.மு.க.வின் 53-வது ஆண்டு விழா தமிழகம் முழுவதும் கட்சியினரால் கொண்டாடப்பட்டது. சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அ.தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கி கொண்டாடினார்கள்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் 53-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை கழக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அங்கிருந்த பிரமாண்ட கொடி கம்பத்தில் அ.தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

இதையொட்டி அ.தி.மு.க. தலைமை கழகம் இன்று கொடி, தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. எடப்பாடி பழனிசாமி கட்சி அலுவலகத்துக்கு வந்தபோது வருங்கால முதல்வரே, எங்கள் பொதுச் செயலாளரே வாழ்க என்று கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முழக்கங்களை எழுப்பினார்கள். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆண்டு விழா நிகழ்ச்சியில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், மகளிர் அணியினர் மற்றும் பல்வேறு அணிகளை சேர்ந்தவர்கள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK தவெக ANNAMALAI MK STALIN AMMK எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் ADMK டிடிவி தினகரன் காங்கிரஸ் TAMIL NADU TTV DHINAKARAN பாராளுமன்ற தேர்தல் AIADMK தமிழக வெற்றிக் கழகம் மு.க.ஸ்டாலின் இந்திய அணி INDIAN CRICKET TEAM முக ஸ்டாலின் ANBUMANI RAMADOSS ரஜினிகாந்த் கனமழை சீமான் UDHAYANIDHI STALIN CONGRESS PMK பாமக தமிழகம் கைது பிரதமர் மோடி PARLIAMENT ELECTION அன்புமணி ராமதாஸ் KEERTHY SURESH வடகிழக்கு பருவமழை கொலை கோவை EDAPPADI PALANISWAMI COIMBATORE தீபாவளி அமமுக சட்டசபை தேர்தல் SEEMAN திருமாவளவன் THIRUMAVALAVAN மதுரை திருநெல்வேலி AJITH NELLAI நெல்லை தென்காசி விடுமுறை TAMILAGA VETTRI KAZHAGAM TAMIL ACTRESS ஓபிஎஸ் தமிழ்நாடு THOOTHUKUDI கள்ளக்காதல் NORTHEAST MONSOON அஜித் MADURAI OPS SENGOTTAIYAN திருப்பரங்குன்றம் பாலியல் தொல்லை வன்னியர் தேவர் கொரோனா நயினார் நாகேந்திரன் கீர்த்தி சுரேஷ் டிரெண்டிங் ELECTION COMMISSION ASSEMBLY ELECTIONS டாப் நியூஸ் வானிலை ஆய்வு மையம் 2024 T20 WORLDCUP தமிழக அரசு