Tamil News & POLLING

 

ராதாபுரம்: சிறுவனைக் கொன்று வாஷிங் மெஷினில் மறைத்துவைத்த பக்கத்து வீட்டுப் பெண் கைது

1 year ago 10 செப்டம்பர் 2024 04:01 AM | views : 137
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே ஆத்துகுறிச்சியில் 3 வயது சிறுவனைக் கொன்று, சாக்குமூட்டையில் கட்டி வாஷிங் மெஷினில் மறைத்து வைத்த பெண்ணை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்..

ஆத்துகுறிச்சி கீழத் தெருவைச் சோ்ந்த கூலித் தொழிலாளி விக்னேஷ். இவரது மனைவி ரம்யா. இவா்களது 2ஆவது மகன் சஞ்சய் (3), அருகேயுள்ள அங்கன்வாடிக்குச் சென்றுவந்தாா்.. திங்கள்கிழமை காலை அங்கன்வாடிக்கு அழைத்துச் செல்வதற்காக ரம்யா தேடியபோது சஞ்சயைக் காணவில்லை. அப்பகுதியில் உள்ள வீடுகள், தண்ணீா்த் தொட்டிகளில் தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை..

இதுதொடா்பாக, ரம்யா அளித்த புகாரின்பேரில் ராதாபுரம் போலீஸாா் வந்து சிறுவனை வீடுவீடாகத் தேடினா். அப்போது, ரம்யாவுக்கும் பக்கத்து வீட்டைச் சோ்ந்த தங்கம்மாளுக்குமிடையே முன்விரோதம் இருந்ததாகத் தெரியவந்தது.. இதையடுத்து, போலீஸாா் தங்கம்மாள் வீட்டில் தேடினா். வாஷிங் மெஷினில் இருந்த சாக்கு மூட்டையைப் பிரித்துப் பாா்த்தபோது, அதற்குள் சஞ்சய் சடலமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.. தங்கம்மாள் முன்விரோதம் காரணமாக சஞ்சயைக் கொன்று சாக்குமூட்டையில் கட்டி, வாஷிங் மெஷினில் மறைத்து வைத்ததாக, போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன், வள்ளியூா் டி.எஸ்.பி. யோகேஷ்குமாா் ஆகியோரும் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனா்.தங்கம்மாளின் மகன் சில மாதங்களுக்கு முன்பு நேரிட்ட விபத்தில் இறந்ததாகவும், அப்போதிலிருந்து அவா் யாரிடமும் அதிகமாகப் பேசுவதில்லை எனவும் கிராம மக்கள் தெரிவித்தனா்..
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை TVK BJP தவெக ANNAMALAI AIADMK AMMK டிடிவி தினகரன் MK STALIN TTV DHINAKARAN TAMIL NADU எடப்பாடி பழனிசாமி ADMK உதயநிதி ஸ்டாலின் காங்கிரஸ் முக ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் ANBUMANI RAMADOSS மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் PMK தமிழகம் இந்திய அணி கனமழை ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN சீமான் INDIAN CRICKET TEAM பாமக CONGRESS பிரதமர் மோடி கொலை அன்புமணி ராமதாஸ் COIMBATORE தீபாவளி சட்டசபை தேர்தல் KEERTHY SURESH வடகிழக்கு பருவமழை அமமுக EDAPPADI PALANISWAMI PARLIAMENT ELECTION கோவை கைது திருமாவளவன் ஓபிஎஸ் தென்காசி THIRUMAVALAVAN கள்ளக்காதல் தமிழ்நாடு AJITH TAMIL ACTRESS விடுமுறை SEEMAN நெல்லை TAMILAGA VETTRI KAZHAGAM NELLAI மதுரை திருநெல்வேலி OPS பாலியல் தொல்லை தேவர் அஜித் டாப் நியூஸ் டிரெண்டிங் 2024 T20 WORLDCUP வன்னியர் MADURAI கீர்த்தி சுரேஷ் மழை NORTHEAST MONSOON திருப்பரங்குன்றம் தமிழக அரசு வானிலை ஆய்வு மையம் ASSEMBLY ELECTIONS THOOTHUKUDI ELECTION COMMISSION