POLLING FLAMES

 

இந்தியா இலங்கை டி20 தொடரை இந்த சேனலில் பார்க்கலாம்.. ஓசில பாக்க முடியாது!

1 year ago 25 ஜூலை 2024 11:32 AM | views : 216
அண்மையில் நடைபெற்று முடிந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை நான்குக்கு ஒன்று (4-1) என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணியானது அடுத்ததாக சூரியகுமார் யாதவ் தலைமையில் தற்போது இலங்கை நாட்டிற்கு சென்று அங்கு நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. அதன் பின்னர் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது.

இந்த தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக முதல் முறையாக கம்பீர் செயல்பட உள்ளதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. அதேவேளையில் இரண்டு வெவ்வேறு அணிகள் எவ்வாறு செயல்பட போகிறார்கள் என்பது குறித்த எதிர்பார்க்கும் அதிகரித்துள்ளது.

இந்த இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான டி20 தொடர்பானது வரும் ஜூலை 27-ஆம் தேதி பல்லகல்லேவில் துவங்குகிறது. இந்த தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா போன்ற மூத்த வீரர்கள் ஓய்வு பெற்று விட்டதால் முற்றிலும் இளம் வீரர்களை கொண்ட அணி களமிறங்கி விளையாட உள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதோடு டி20 உலக சாம்பியனான இந்திய அணி இலங்கை அணியை வாஷ் அவுட் செய்யும் முனைப்போடு களமிறங்க உள்ளதால் இந்த தொடரானது இலங்கை அணிக்கு மிக கடினமான தொடர் என்று கூறலாம். இந்நிலையில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இந்த டி20 தொடரை எந்த சேனலில் பார்க்கலாம்? போட்டிகள் இந்திய நேரப்படி எத்தனை மணிக்கு துவங்கும்? என்பது குறித்த தகவல்களை இங்கு காணலாம்.

அந்த வகையில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இந்த டி20 தொடரின் போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. போட்டிகள் இலங்கையில் நடைபெறுவதால் இந்த தொடரின் ஒளிபரப்பு உரிமத்தை சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் கைப்பற்றியுள்ளது. இதன் காரணமாக சோனி குழும தொலைகாட்சிகள் மட்டுமே இந்த போட்டியை பார்க்க முடியும்.


அதே வேளையில் ஆன்லைனில் பார்க்க விரும்புவோர் சோனி லைவ் ஆப்பை பயன்படுத்தி தான் பார்க்க வேண்டும். ஆனால் அதற்கு காசு கட்ட வேண்டும். ஒருவேளை போட்டிகளை ஆன்லைனில் இலவசமாக பார்க்க வேண்டுமெனில் ஜியோ ஆப்பின் மூலம் சோனி சேனல்களை வைத்து இலவசமாக பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக TTV DHINAKARAN டிடிவி தினகரன் MK STALIN உதயநிதி ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் இந்திய அணி ANBUMANI RAMADOSS AIADMK TAMIL NADU ரஜினிகாந்த் காங்கிரஸ் கனமழை PMK தமிழக வெற்றிக் கழகம் UDHAYANIDHI STALIN பாமக PARLIAMENT ELECTION கோவை INDIAN CRICKET TEAM முக ஸ்டாலின் CONGRESS COIMBATORE EDAPPADI PALANISWAMI திருமாவளவன் கொலை தமிழகம் அன்புமணி ராமதாஸ் அமமுக சீமான் TAMILAGA VETTRI KAZHAGAM பிரதமர் மோடி தமிழ்நாடு OPS வன்னியர் கைது தேவர் KEERTHY SURESH கொரோனா AJITH தமிழக சட்டசபை தேர்தல் TAMIL ACTRESS சட்டசபை தேர்தல் ஓபிஎஸ் THIRUMAVALAVAN SURIYA BIGG BOSS TAMIL NELLAI சூர்யா நெல்லை அன்புமணி ELECTION COMMISSION தென்காசி கள்ளக்காதல் விடுமுறை தீபாவளி பாலியல் தொல்லை CSK திருப்பரங்குன்றம் அஜித் தூத்துக்குடி வடகிழக்கு பருவமழை மதுரை RAJINIKANTH கீர்த்தி சுரேஷ்