அமெரிக்காவில் ஆளில்லா AI ரோபோ டாக்சி சேவை - எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் அறிமுகம்
டெஸ்லா நிறுவனம் தனது தானியங்கி ரோபோ டாக்சி சேவையை அமெரிக்காவின் மியாமி மாகாணத்தில் நேற்று தொடங்கி வைத்தது.
மியாமி சேவையானது ஆஸ்டின், டல்லாஸ் மற்றும் ஹவுஸ்டனில் ஏற்கனவே செயல்பட்டு வரும் நெட்வொர்க் உடன் இணைந்து, டெஸ்லா ரைடு ஹெய்லிங் செயலி இயங்குகிறது.
இந்த வகை வாகனங்கள், ஓட்டுநர் இல்லாமல் தன்னிச்சையாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. டெஸ்லா பிரத்யேகமாக உருவாக்கிய சைபர்கேப் மூலம் ஸ்டீயரிங் வீல் மற்றும் பெடல்கள் இல்லாமல் வாகனங்கள் இயங்குகின்றன.
இந்த வாகனங்கள் மியாமியில் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வரும் நிலையில், பின்னர் அதிகாரப்பூர்வமாக பொது பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெஸ்லா தனது தானியங்கி ஓட்டுநர் மென்பொருளின் ஒரு பதிப்பை தனது ரோபோ டாக்சிகளில் பயன்படுத்துவதன்மூலம், அதன் தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க் மின்சார வாகனங்களில் இருந்து செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ் துறைக்கு மாறுவதை குறிக்கிறது.
ஆல்பபெட் நிறுவனத்தின் வேமோ மற்றும் அமேசான் நிறுவனத்தின் ஜூக்ஸ் ஆகியவற்றிற்கு போட்டியாக, ரோபோ டாக்சி சேவையை டெஸ்லா தீவிரப்படுத்தி உள்ளது.
இதுகுறித்து டெஸ்லா தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க் கூறுகையில், “மனித பாதுகாப்பு கண்காணிப்பாளர்கள் இல்லாத கார்-கள் அமெரிக்காவில் பரவலாக பயன்பாட்டிற்கு வரும்” என்று தெரிவித்தார்.