Tamil News & POLLING

 

கடலூரில் கைதுசெய்யப்பட்ட கிளி ஜோதிடர்கள் இருவரும் விடுவிப்பு

1 year ago 09 ஏப்ரல் 2024 11:31 AM | views : 153
கடலூரில் போட்டியிடும் பாமக வேட்பாளர் தங்கர் பச்சான், பிரசாரத்தின்போது கிளி ஜோதிடம் பார்த்தார். அப்போது கிளி எடுத்துக் கொடுத்த சீட்டில் எதிர்காலம் சிறப்பாக உள்ளது என்று இருந்தது. இதற்கு மகிழ்ச்சி தெரிவித்த தங்கர்பச்சான், பின்னர் ஓட்டு கேட்க சென்றார். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இதற்கிடையே, தங்கர் பச்சானுக்கு கிளி ஜோதிடம் பார்த்த செல்வராஜ் என்பவரையும், அதே பகுதியில் கிளி ஜோதிடம் பார்த்த சீனுவாசன் என்பவரையும் வனத்துறையினர் கைது செய்தனர். வனவிலங்கு பாதுகாப்பு திருத்தச் சட்டத்தின் கீழ், கிளிகளை வளர்ப்பது குற்றம் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

கிளி ஜோதிடர்கள் கைதுசெய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. குறிப்பாக, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், இது திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்றும், தங்கர்பச்சான் வெற்றி பெறுவார் என்று கிளி சோதிடர் கூறியதை தி.மு.க.வால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், தங்கர் பச்சானுக்கு கிளி ஜோதிடம் பார்த்த செல்வராஜ் மற்றும் சீனுவாசன் ஆகிய இரு ஜோதிடர்களையும் வனத்துறையினர் விடுவித்தனர்.

அவர்களிடம் இருந்த 4 கிளிகளையும் பறிமுதல் செய்த வனத்துறையினர், ஜோதிடர்களை எச்சரித்து விடுவித்தனர்.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக ANNAMALAI AMMK ADMK AIADMK TTV DHINAKARAN காங்கிரஸ் TAMIL NADU பாராளுமன்ற தேர்தல் டிடிவி தினகரன் MK STALIN உதயநிதி ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி மு.க.ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் ANBUMANI RAMADOSS முக ஸ்டாலின் PMK கனமழை இந்திய அணி சீமான் தமிழகம் UDHAYANIDHI STALIN ரஜினிகாந்த் CONGRESS பாமக INDIAN CRICKET TEAM கொலை PARLIAMENT ELECTION அன்புமணி ராமதாஸ் பிரதமர் மோடி SEEMAN கைது தீபாவளி COIMBATORE கோவை KEERTHY SURESH வடகிழக்கு பருவமழை EDAPPADI PALANISWAMI சட்டசபை தேர்தல் அமமுக கள்ளக்காதல் NELLAI நெல்லை விடுமுறை திருநெல்வேலி தென்காசி TAMIL ACTRESS ஓபிஎஸ் தமிழ்நாடு திருமாவளவன் TAMILAGA VETTRI KAZHAGAM AJITH மதுரை THIRUMAVALAVAN தேவர் OPS 2024 T20 WORLDCUP திருப்பரங்குன்றம் நடிகை டிரெண்டிங் NORTHEAST MONSOON டாப் நியூஸ் MADURAI வன்னியர் நயினார் நாகேந்திரன் மழை நாடாளுமன்ற தேர்தல் அஜித் கீர்த்தி சுரேஷ் THOOTHUKUDI வானிலை ஆய்வு மையம் ASSEMBLY ELECTIONS தமிழக அரசு ELECTION COMMISSION