Tamil News & POLLING

 

அமைச்சர் துரைமுருகன் சொந்த கிராமத்தில் ரூ.7.5 லட்சம் பறிமுதல்

1 year ago 08 ஏப்ரல் 2024 12:35 PM | views : 148
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே உள்ளது காங்குப்பம் கிராமம். இது அமைச்சர் துரைமுருகனின் சொந்த ஊர் ஆகும். இந்த கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன். விவசாயி. வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இவருடைய வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் சப்ளை செய்ய பணம் பதுக்கி வைத்திருப்பதாக பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பறக்கும் படையினர் மற்றும் போலீசார் நேற்று இரவு அவரது வீட்டை சோதனையிட சென்றனர்.

இதனை அறிந்ததும் நடராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டை உள் பக்கமாக பூட்டி கொண்டனர். மேலும் வீட்டில் உள்ள அனைத்து மின்விளக்குகளையும் அணைத்துவிட்டனர்.இது பற்றிய தகவலறிந்த கே.வி.குப்பம் தாசில்தார் சந்தோஷ், இன்ஸ்பெக்டர் ஆதர்ஷ் மற்றும் போலீசார் அங்கு வந்து வீட்டின் கதவை பலமுறை கைகளால் தட்டினர். உடனடியாக கதவை திறக்கும்படி கூறினர்.

ஆனாலும் நடராஜன் குடும்பத்தினர் கதவை திறக்கவே இல்லை. இது பற்றிய கே.வி.குப்பம் தாசில்தார் சந்தோஷ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.அதன் பேரில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் குடியாத்தம் டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் உட்பட 100-க்கும் அதிகமான போலீசார் அங்கு விரைந்து வந்தனர். வீட்டின் மொட்டை மாடி வழியாக சென்று கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்தனர்.

மொட்டை மாடியில் கட்டு கட்டாக ரூ.2.5 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் சிதறி கிடந்தன அவற்றை பறிமுதல் செய்தனர். வீட்டுக்குள் சென்று அதிரடியாக சோதனை நடத்தினர். அங்கு பதுக்கி வைத்திருந்த ரூ.5 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.போலீசாரை கண்டதும் நடராஜன் மற்றும் அவருடைய மனைவி பதட்டமான நிலையில் காணப்பட்டனர். மேலும் எப்படி வீட்டுக்குள் வரலாம் என அதிகாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஆனாலும் அதிகாரிகள் அதைக் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டனர். நடராஜன் வீட்டில் பணம் பதுக்கியது யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அமைச்சர் துரைமுருகன் சொந்த கிராமத்தில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK ANNAMALAI தவெக AMMK AIADMK டிடிவி தினகரன் TAMIL NADU ADMK பாராளுமன்ற தேர்தல் MK STALIN காங்கிரஸ் TTV DHINAKARAN உதயநிதி ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி மு.க.ஸ்டாலின் ANBUMANI RAMADOSS இந்திய அணி முக ஸ்டாலின் INDIAN CRICKET TEAM தமிழக வெற்றிக் கழகம் ரஜினிகாந்த் PMK தமிழகம் சீமான் கனமழை UDHAYANIDHI STALIN CONGRESS பாமக கொலை கைது PARLIAMENT ELECTION பிரதமர் மோடி அன்புமணி ராமதாஸ் EDAPPADI PALANISWAMI அமமுக SEEMAN சட்டசபை தேர்தல் வடகிழக்கு பருவமழை தீபாவளி கோவை KEERTHY SURESH COIMBATORE NELLAI ஓபிஎஸ் திருநெல்வேலி TAMIL ACTRESS AJITH கள்ளக்காதல் மதுரை நெல்லை TAMILAGA VETTRI KAZHAGAM தமிழ்நாடு விடுமுறை தென்காசி THIRUMAVALAVAN திருமாவளவன் டிரெண்டிங் தேவர் தமிழக அரசு அஜித் NORTHEAST MONSOON ASSEMBLY ELECTIONS கீர்த்தி சுரேஷ் OPS நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றம் ELECTION COMMISSION 2024 T20 WORLDCUP டாப் நியூஸ் MADURAI THOOTHUKUDI வானிலை ஆய்வு மையம் வன்னியர்