Tamil News & POLLING

 

மோடிதான் என்னை ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுமாறு கூறினார் : ஓ.பன்னீர்செல்வம்

1 year ago 04 ஏப்ரல் 2024 01:44 PM | views : 160
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணியில் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-நான் கூட்டணி சார்பாக தேர்தலில் போட்டியிட பாரதப் பிரதமரிடம் விருப்பம் தெரிவித்த போது ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுங்கள் என்று தெரிவித்தார்.

எனக்கு போட்டியாக பன்னீர்செல்வம் என பலரை நிறுத்தி உள்ளனர். யார் நிறுத்தி இருக்கிறார்கள் என்பதை நான் எனது வாயால் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, உங்களுக்கே தெரியும்.கச்சத்தீவை 1974-ல் காங்கிரஸ் அரசும், தி.மு.க. அரசும் தாரை வார்த்து இலங்கைக்கு கொடுத்தது. கச்சத்தீவை மீட்க 2011-ல் உச்சநீதிமன்றத்தில் அ.தி.மு.க. சார்பில் வழக்கு தாக்கல் செய்தபோது இங்கு இருக்கும் ஆவணங்கள் அனைத்தும் அங்கு சமர்ப்பிப்பட்டு உள்ளது. கச்சத் தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் உறுதி கூறியுள்ளார்.

இந்த பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்க வழிவகை செய்யப்படும். படித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்க பயிற்சி வகுப்புகள் தொடங் கப்படும். கனிமவளம் பாதிக்காத வகையில் தொழில் வளம் பெருக நடவடிக்கை எடுப்பேன். நானும் ராமநாதபுரத்தை சேர்ந்தவன் தான். பழைய பிரிக்கப்படாத ராமநாதபுரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர்தான் சொந்த ஊர்.அ.தி.மு.க.வில் தற்போது யார் வேட்பாளராக நிற்கிறார்கள் என்றே தெரியவில்லை. அந்த அளவிற்கு கட்சியின் நிலை கீழே சென்று உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK தவெக ANNAMALAI AMMK MK STALIN ADMK எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரன் பாராளுமன்ற தேர்தல் AIADMK TAMIL NADU TTV DHINAKARAN காங்கிரஸ் உதயநிதி ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் மு.க.ஸ்டாலின் இந்திய அணி INDIAN CRICKET TEAM ANBUMANI RAMADOSS முக ஸ்டாலின் சீமான் ரஜினிகாந்த் CONGRESS PMK கனமழை UDHAYANIDHI STALIN தமிழகம் பாமக PARLIAMENT ELECTION பிரதமர் மோடி அன்புமணி ராமதாஸ் சட்டசபை தேர்தல் கொலை EDAPPADI PALANISWAMI வடகிழக்கு பருவமழை அமமுக KEERTHY SURESH தீபாவளி கைது COIMBATORE கோவை SEEMAN ஓபிஎஸ் திருமாவளவன் AJITH THIRUMAVALAVAN தென்காசி திருநெல்வேலி விடுமுறை தமிழ்நாடு கள்ளக்காதல் நெல்லை NELLAI TAMILAGA VETTRI KAZHAGAM TAMIL ACTRESS மதுரை THOOTHUKUDI தமிழக அரசு வன்னியர் டிரெண்டிங் பாலியல் தொல்லை டாப் நியூஸ் தேவர் ELECTION COMMISSION ASSEMBLY ELECTIONS திருப்பரங்குன்றம் SENGOTTAIYAN 2024 T20 WORLDCUP கொரோனா TAMIL CINEMA NORTHEAST MONSOON அஜித் OPS வானிலை ஆய்வு மையம் MADURAI நயினார் நாகேந்திரன் கீர்த்தி சுரேஷ்