Tamil News & POLLING

 

அ.தி.மு.க. சின்னம் : ஓ.பி.எஸ்.-க்கு நிரந்தர தடை

2 years ago 18 மார்ச் 2024 10:40 AM | views : 178
கடந்த 2022 ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 4 பேரை கட்சியில் இருந்து நீக்கியும், பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில், அவர் உட்பட 4 பேரை நீக்கி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்தது.
இந்த நிலையில், அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை ஓபிஎஸ் தரப்பினர் பயன்படுத்த தடை விதிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி உத்தரவில், பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை எதுவும் விதிக்கவில்லை.

எனவே, அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை, கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஓபிஎஸ் மற்றும் அவரது தரப்பினர் பயன்படுத்த கூடாது என்று இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். சென்னை ஐகோர்ட் இதையடுத்து சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் ஓபிஎஸ் தரப்பில் ஒரு முறையீடு செய்யப்பட்டது. தனி நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவை எதிர்த்து, மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கின் தீர்ப்பில், அதிமுக கொடி, சின்னம், லெட்டர் பேட் உள்ளிட்டவைகளை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் முகமது ஷபீக் ஆகியோர், தடை விதித்தது செல்லும் என தீர்ப்பளித்தனர். மேலும் ஓபிஎஸ் தரப்பு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். அதேநேரம் வேண்டுமானால் ஓபிஎஸ் தரப்பு, தனி நீதிபதி முன் உரிய மனு தாக்கல் செய்யலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்து இருந்தனர்.இந்நிலையில் இந்த வழக்கில் விசாரணை இன்று சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு நிரந்தர தடை விதித்து உத்தரவிட்டது.மேலும் இந்த வழக்கில் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை நிரந்தரம் செய்தும் உத்தரவிட்டது.பாராளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவேன் என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்து இருந்த நிலையில் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK தவெக ANNAMALAI MK STALIN AMMK ADMK டிடிவி தினகரன் பாராளுமன்ற தேர்தல் காங்கிரஸ் TTV DHINAKARAN எடப்பாடி பழனிசாமி AIADMK TAMIL NADU உதயநிதி ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் மு.க.ஸ்டாலின் ANBUMANI RAMADOSS INDIAN CRICKET TEAM இந்திய அணி முக ஸ்டாலின் கனமழை சீமான் CONGRESS PMK ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN பாமக தமிழகம் பிரதமர் மோடி PARLIAMENT ELECTION அன்புமணி ராமதாஸ் KEERTHY SURESH SEEMAN அமமுக வடகிழக்கு பருவமழை சட்டசபை தேர்தல் கொலை EDAPPADI PALANISWAMI தீபாவளி COIMBATORE கோவை கைது NELLAI நெல்லை TAMIL ACTRESS மதுரை திருநெல்வேலி ஓபிஎஸ் THIRUMAVALAVAN TAMILAGA VETTRI KAZHAGAM THOOTHUKUDI தமிழ்நாடு AJITH கள்ளக்காதல் தென்காசி திருமாவளவன் விடுமுறை SENGOTTAIYAN NORTHEAST MONSOON கொரோனா கீர்த்தி சுரேஷ் நயினார் நாகேந்திரன் OPS TAMIL CINEMA MADURAI அஜித் வானிலை ஆய்வு மையம் தேவர் 2024 T20 WORLDCUP தமிழக அரசு டிரெண்டிங் டாப் நியூஸ் ASSEMBLY ELECTIONS ELECTION COMMISSION வன்னியர் பாலியல் தொல்லை திருப்பரங்குன்றம்