Tamil News & POLLING

 

திமுக ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துகிறார் அண்ணாமலை! அமீர் குற்றச்சாட்டு

2 years ago 18 ஏப்ரல் 2023 05:10 AM | views : 155
விமல் நடித்துள்ள குலசாமி திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு
விழா வடபழனி பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் அமீர்,
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் அமீர் தெரிவித்ததாவது..

” சென்சார் செய்யப்பட்ட பிறகு படத்திற்கு தடை சொல்வது ஏற்புடையது அல்ல.
திரைப்படம் மூலம் அரசியல் விழிப்புணர்வு செய்ய வேண்டுமே தவிர அரசியல்
கலவரங்களை செய்யக் கூடாது.

தனி மனித விமர்சனத்தை யார் முன்வைத்தாலும் ஏற்புடையது அல்ல. முத்துராமலிங்க தேவர் வேறு பெரியார் வேறு. இருவரும் இருவேறு தளத்தில் இருப்பவர்கள் அவர்களை ஒப்பிடவே கூடாது.



ஏப்ரல் 14 அன்று எல்லாரும் போல நானும் ஆர்வமாக இருந்தேன் அண்ணாமலை ஊழல் பட்டியலை வெளியிடுவார் என்று . ஆனால் அவர் வருமானவரித்துறை அதிகாரி
போன்று சொத்து பட்டியலை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே வருமான வரித்துறை அதிகாரிகளிடம் கொடுத்தது தான். இதில் எதுவும் புதியது இல்லை.

தவறான கருத்தை பரப்பி தமிழகத்தில் நடைபெறும் ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பது தான் அண்ணாமலை திட்டம். நாடாளுமன்ற தேர்தலுக்கு மக்கள் மத்தியில் இதை கொண்டு செல்ல நினைத்தார்கள். ஆனால் எனக்கு தெரிந்து அது புஸ்வானமாக மாறிவிட்டது.

ஆர் எஸ் எஸ் பேரணி நடந்தது எனக்கு வருத்தம் தான். அமைதியாக நடந்ததா இல்லையா
என்பது முக்கியம் இல்லை. இந்த பேரணியால் மக்களுக்கு என்ன பயன். ஆனால் வட
நாட்டில் ஏன் கத்தி வேல் உடன் வருகின்றனர். இது தொடக்கம் தான் இதை வைத்து தான்
அடுத்து மீண்டும் நடத்துவார்கள்” என இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK தவெக ANNAMALAI AMMK MK STALIN AIADMK காங்கிரஸ் பாராளுமன்ற தேர்தல் டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமி ADMK TAMIL NADU TTV DHINAKARAN உதயநிதி ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் இந்திய அணி முக ஸ்டாலின் INDIAN CRICKET TEAM ANBUMANI RAMADOSS PMK கனமழை தமிழகம் ரஜினிகாந்த் சீமான் CONGRESS UDHAYANIDHI STALIN பாமக அன்புமணி ராமதாஸ் PARLIAMENT ELECTION பிரதமர் மோடி கைது வடகிழக்கு பருவமழை அமமுக EDAPPADI PALANISWAMI COIMBATORE கோவை கொலை SEEMAN KEERTHY SURESH சட்டசபை தேர்தல் தீபாவளி TAMIL ACTRESS கள்ளக்காதல் தென்காசி THIRUMAVALAVAN NELLAI நெல்லை திருமாவளவன் TAMILAGA VETTRI KAZHAGAM திருநெல்வேலி மதுரை ஓபிஎஸ் தமிழ்நாடு AJITH விடுமுறை THOOTHUKUDI திருப்பரங்குன்றம் கீர்த்தி சுரேஷ் OPS தேவர் வன்னியர் NORTHEAST MONSOON 2024 T20 WORLDCUP பாலியல் தொல்லை MADURAI வானிலை ஆய்வு மையம் நயினார் நாகேந்திரன் ELECTION COMMISSION டிரெண்டிங் அஜித் தமிழக அரசு டாப் நியூஸ் SENGOTTAIYAN ASSEMBLY ELECTIONS