Tamil News & POLLING

 

திருமணச் சடங்கின்போது மணப்பெண் திடீர் மரணம்: தங்கையுடன் நடந்து முடிந்த திருமணம்!

3 years ago 28 பிப்ரவரி 2023 04:40 PM | views : 164
இன்றைய சமகால பின்னணியிலும், பெண்கள் மறுமணம் செய்தால் அதை விமர்சிக்க, அவதூறு பரப்ப பெரும்பாலானோர் உள்ளனர். ஆனால், மறுமணம் செய்யும்  கணவன்கள் இத்தகைய அவதூறுகளுக்கு ஆளாகுவதில்லை. இத்தகைய கொடுப்பினை ஆண்களுக்கு மட்டுமே உண்டு. குஜராத்தில், திருமணம் நடை பெறுவதற்கு முன்பே, மணமகனுக்கு மறுமணம் செய்ய வைக்கப்பட்டிருக்கிறது. இந்த செயல் பல்வேறு விவாதங்களை சமூக ஊடகங்களில் எழுப்பியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் திருமண சடங்குகள் நடந்து கொண்டிருக்கும் போது மணமகள் இறந்துவிட, மணமகனுக்கும் இறந்தவரின் தங்கைக்கும் திருமணம் நடைபெற்றிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியாகும் செய்தியில், " குஜராத் மாநிலம் பாவ்நகரில் உள்ள பகவானேஷ்வர் மகாதேவ் திருக்கோயில் முன்பாக மணமகன் விஷால் மற்றும் மணமகள் கேதால் (Hetal) ஆகிய இருவருக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருமண சடங்குகள்போது, மணமகள் உடல்நலக்குறைவு காரணமாக மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டும் எந்தவித பலனும் இல்லை. மாரடைப்பு காரணமாக உயிர் இழந்ததாக அறிவிக்கப்பட்டார்.

இதனைத் தொடந்து, அதே திருமண மேடையில் இறந்தவரின் தங்கையை திருமணம் செய்து வைக்க  பெண்ணின் பெற்றோர்கள் முடிவெடுத்தனர். இறந்தவர் பிணவறையில் இருக்கும்போதே,  இரண்டாம் மகளுக்கு அதே மணமகனை திருமணம் செய்து வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக நகர் மன்ற உறுப்பினரும் மாலதாரி சமாஜி என்ற அமைப்பின் தலைவருமான  லக்ஷமன்பாய் ரத்தோர் கூறுகையில், " இது மிகவும் துயரமான நிகழ்வு. மணமகன் வீட்டாரை வெறுங்கையுடன் அனுப்ப வேண்டாம் என்ற முடிவுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டது" என்று தெரிவித்தார்.

2021ல் இதே போன்ற சம்பவம்: 

உத்திரப் பிரதேசத்தில் 2021ல் இதே மாதிரி ஒரு சம்பவம் நடந்திருப்பதாகவும், இறந்த மகளை பக்கத்து அறையில் வைத்து விட்டு திருமணம் நடந்திருப்பதாகவும் ட்விட்டரில் பதிவு செய்து வருகின்றனர் .

இது பற்றி கூகுளில் தேடிக் கொண்டிருந்த போது உத்திரப் பிரதேசத்தில் 2021ல் இதே மாதிரி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. இறந்த மகளை பக்கத்து அறையில் வைத்து விட்டு திருமணம் நடந்திருக்கிறது.
என்னவொரு கொடுமை. மணப்பெண்களின் நிலை மனதை பிசைகிறது :(https://t.co/nbceSMdpmC
— Kavitha Muralidharan (@kavithamurali) February 28, 2023


இருப்பினும், இந்த நிகழ்வை கண்டிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பெண்ணியவாதிகளும் ஊடகங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இரண்டாவது மகளின் விருப்பத்துடன் இந்த திருமணம் நடைபெற்றதா? என்று கேள்வி எழுப்பும் அவர்கள்,    ஒரு நியாயமான திருமண வாழ்ககைக்கு ஆணும், பெண்ணும் முக்கியமானவர்கள். ஆனால், பெரும்பாலான திருமணங்களில் பெண்களின் விருப்பத்தைக் கேட்காமல் பெற்றோர், சுற்றத்தினரின் வற்புறுத்தல்களை மட்டுமே முடிவு செய்யப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக ANNAMALAI MK STALIN AMMK AIADMK TAMIL NADU ADMK பாராளுமன்ற தேர்தல் TTV DHINAKARAN உதயநிதி ஸ்டாலின் டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமி காங்கிரஸ் மு.க.ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் ANBUMANI RAMADOSS இந்திய அணி INDIAN CRICKET TEAM முக ஸ்டாலின் PMK சீமான் UDHAYANIDHI STALIN ரஜினிகாந்த் கனமழை CONGRESS பாமக தமிழகம் அன்புமணி ராமதாஸ் PARLIAMENT ELECTION பிரதமர் மோடி COIMBATORE SEEMAN EDAPPADI PALANISWAMI KEERTHY SURESH கைது கொலை வடகிழக்கு பருவமழை கோவை தீபாவளி அமமுக சட்டசபை தேர்தல் நெல்லை திருமாவளவன் THOOTHUKUDI தென்காசி TAMIL ACTRESS NELLAI THIRUMAVALAVAN TAMILAGA VETTRI KAZHAGAM திருநெல்வேலி ஓபிஎஸ் தமிழ்நாடு AJITH மதுரை விடுமுறை கள்ளக்காதல் டிரெண்டிங் நயினார் நாகேந்திரன் டாப் நியூஸ் ASSEMBLY ELECTIONS SENGOTTAIYAN 2024 T20 WORLDCUP அஜித் TAMIL CINEMA NORTHEAST MONSOON MADURAI OPS தமிழக அரசு திருப்பரங்குன்றம் கீர்த்தி சுரேஷ் வன்னியர் தேவர் ELECTION COMMISSION கொரோனா பாலியல் தொல்லை வானிலை ஆய்வு மையம்