Tamil News & POLLING

 

குழந்தை திருமணங்கள் முழுமையாக முடிவுக்கு வரும்: ஸ்மிரிதி இரானி

3 years ago 21 பிப்ரவரி 2023 03:51 AM | views : 160
புதுடெல்லி :2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர் கைலாஷ் சத்யார்த்தி. இவர் குழந்தைகள் அறக்கட்டளை நடத்தி வருகிறார். இந்த அமைப்பு சார்பில் குழந்தை திருமணங்களை தடுப்பது தொடர்பான தேசிய அளவிலான கருத்தரங்கை டெல்லியில் நேற்று நடத்தினார். இதில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, "குழந்தை திருமணம் ஒரு குற்றம். அதை நாம் முழுமையாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும். குழந்தை திருமணத்தை முற்றிலும் நிறுத்தி சரித்திரம் படைப்போம். 23 சதவீதமாக இருக்கும் குழந்தை திருமணங்களை பூஜ்ஜியமாக குறைக்க வேண்டும். இதற்கு அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது. குழந்தை திருமணத்தை தடுக்க சட்டம் தன் கடமையை செய்கிறது. ஆனால் மக்களும் அரசோடு இணைய வேண்டும்" என்று கூறினார்.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக ANNAMALAI MK STALIN AMMK AIADMK டிடிவி தினகரன் ADMK காங்கிரஸ் TAMIL NADU எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN பாராளுமன்ற தேர்தல் தமிழக வெற்றிக் கழகம் மு.க.ஸ்டாலின் முக ஸ்டாலின் இந்திய அணி INDIAN CRICKET TEAM ANBUMANI RAMADOSS கனமழை CONGRESS ரஜினிகாந்த் PMK சீமான் UDHAYANIDHI STALIN தமிழகம் பாமக பிரதமர் மோடி அன்புமணி ராமதாஸ் PARLIAMENT ELECTION தீபாவளி EDAPPADI PALANISWAMI கோவை கைது அமமுக KEERTHY SURESH SEEMAN கொலை COIMBATORE வடகிழக்கு பருவமழை சட்டசபை தேர்தல் கள்ளக்காதல் நெல்லை மதுரை TAMIL ACTRESS THOOTHUKUDI TAMILAGA VETTRI KAZHAGAM விடுமுறை திருமாவளவன் தமிழ்நாடு THIRUMAVALAVAN தென்காசி ஓபிஎஸ் AJITH திருநெல்வேலி NELLAI நயினார் நாகேந்திரன் NORTHEAST MONSOON MADURAI டாப் நியூஸ் கீர்த்தி சுரேஷ் டிரெண்டிங் அஜித் தேவர் TAMIL CINEMA பாலியல் தொல்லை வன்னியர் திருப்பரங்குன்றம் கொரோனா வானிலை ஆய்வு மையம் 2024 T20 WORLDCUP OPS தமிழக அரசு ELECTION COMMISSION ASSEMBLY ELECTIONS SENGOTTAIYAN