Tamil News & POLLING

 

சன் டிவி நடிகைக்கு விரைவில் டும் டும் டும்..! கணவரின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை.!

3 years ago 02 டிசம்பர் 2022 10:36 AM | views : 160
ஒரு சில விளம்பர படங்களில் நடித்த ஸ்வேதா பன்டேக்கர் 2007 ஆம் ஆண்டு 'தல' அஜித் நடிப்பில் வெளியான 'ஆழ்வார்' திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார்.

அதையடுத்து பூவா தலையா, வள்ளுவனும் வாசுகியும், மீரா உடன் கிருஷ்ணன், நான்தான் பாலா, பூலோகம் ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார் ஸ்வேதா.

2009 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான ‘மகள்’ என்ற தொடரில் நடித்துள்ளார் ஸ்வேதா.

பிறகு சன் டிவியில் ஒளிப்பரப்பான 'சந்திரலேகா' சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஸ்வேதா பன்டேக்கர்.

'சந்திரலேகா' சீரியலில் சந்திரா என்ற கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை ஸ்வேதா பன்டேக்கர் பொறியியல் பட்டதாரி ஆவார்.

2014 ஆம் ஆண்டு தொடங்கிய ஏ.பி.ராஜேந்திரன் இயக்கிய 'சந்திரலேகா' தொடரானது 8 வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் ஸ்வேதா தான் திருமணம் செய்து கொள்ளவிருக்கும் வருங்கால கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அவர் பகிர்ந்துள்ள அந்த பதிவில் 'என் இதயம் நீண்ட காலமாக காணவில்லை, இறுதியாக என் இதயத்தை கண்டுபிடித்துவிட்டேன்.. கடவுளுக்கு நன்றி!' என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவிற்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை சுவேதாவிற்கு தெரிவித்து வருகின்றனர்.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக ANNAMALAI MK STALIN AMMK AIADMK TAMIL NADU ADMK பாராளுமன்ற தேர்தல் TTV DHINAKARAN உதயநிதி ஸ்டாலின் டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமி காங்கிரஸ் மு.க.ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் ANBUMANI RAMADOSS இந்திய அணி INDIAN CRICKET TEAM முக ஸ்டாலின் PMK சீமான் UDHAYANIDHI STALIN ரஜினிகாந்த் கனமழை CONGRESS பாமக தமிழகம் அன்புமணி ராமதாஸ் PARLIAMENT ELECTION பிரதமர் மோடி COIMBATORE SEEMAN EDAPPADI PALANISWAMI KEERTHY SURESH கைது கொலை வடகிழக்கு பருவமழை கோவை தீபாவளி அமமுக சட்டசபை தேர்தல் விடுமுறை தென்காசி தமிழ்நாடு AJITH ஓபிஎஸ் மதுரை TAMILAGA VETTRI KAZHAGAM திருமாவளவன் THOOTHUKUDI THIRUMAVALAVAN NELLAI நெல்லை திருநெல்வேலி TAMIL ACTRESS கள்ளக்காதல் கீர்த்தி சுரேஷ் டாப் நியூஸ் நயினார் நாகேந்திரன் டிரெண்டிங் 2024 T20 WORLDCUP SENGOTTAIYAN திருப்பரங்குன்றம் தமிழக அரசு அஜித் ASSEMBLY ELECTIONS MADURAI NORTHEAST MONSOON வானிலை ஆய்வு மையம் ELECTION COMMISSION TAMIL CINEMA வன்னியர் OPS பாலியல் தொல்லை தேவர் கொரோனா