Tamil News & POLLING

 

முடிவெட்ட வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை! சலூன் கடை உரிமையாளர் போக்சோவில் கைது

3 years ago 30 நவம்பர் 2022 08:12 AM | views : 162
கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் முடிவெட்ட வந்த 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சலூன் கடை உரிமையாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு லட்சுமி நகரை சேர்ந்தவர் மணிகண்டன்(53). இவர் கிணத்துக்கடவில் சலூன் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது மகன் மற்றும் 3 வயது மகளை முடி வெட்டுவதற்காக, மணிகண்டனின் கடைக்கு அழைத்துச் சென்றுள்ளார். மணிகண்டன் முதலில் அவரது மகனுக்கு முடிவெட்டிய நிலையில், பின்னர் அவரது மகளுக்கு முடி வெட்டியுள்ளார். அப்போது, பணம் எடுப்பதற்காக அந்த பெண் வெளியே புறப்பட்டு சென்றுள்ளார்.

அப்போது, மணிகண்டன், சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. சிறிது நேரத்திற்கு பின் அந்த பெண் திரும்பி வந்தபோது சிறுமி அழுது கொண்டிருந்துள்ளார். இது குறித்து அவரிடம் தாய் விசாரித்தபோது, மணிகண்டன் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிறுமி தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் மணிகண்டன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK விஜய் திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக TVK அண்ணாமலை BJP தவெக ANNAMALAI AMMK ADMK TTV DHINAKARAN MK STALIN எடப்பாடி பழனிசாமி TAMIL NADU AIADMK டிடிவி தினகரன் உதயநிதி ஸ்டாலின் காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகம் முக ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் ANBUMANI RAMADOSS மு.க.ஸ்டாலின் ரஜினிகாந்த் இந்திய அணி கனமழை UDHAYANIDHI STALIN PMK INDIAN CRICKET TEAM சீமான் தமிழகம் பாமக CONGRESS அன்புமணி ராமதாஸ் கொலை பிரதமர் மோடி அமமுக COIMBATORE PARLIAMENT ELECTION கோவை சட்டசபை தேர்தல் KEERTHY SURESH EDAPPADI PALANISWAMI தீபாவளி வடகிழக்கு பருவமழை கைது ஓபிஎஸ் திருமாவளவன் திருநெல்வேலி தமிழ்நாடு விடுமுறை TAMILAGA VETTRI KAZHAGAM மதுரை THIRUMAVALAVAN நெல்லை தென்காசி NELLAI SEEMAN AJITH TAMIL ACTRESS கள்ளக்காதல் தமிழக அரசு டிரெண்டிங் திருப்பரங்குன்றம் OPS ASSEMBLY ELECTIONS THOOTHUKUDI தேவர் MADURAI பாலியல் தொல்லை 2024 T20 WORLDCUP டாப் நியூஸ் ELECTION COMMISSION கீர்த்தி சுரேஷ் வானிலை ஆய்வு மையம் வன்னியர் NORTHEAST MONSOON அஜித் கொரோனா