Tamil News & POLLING

 

ஓபிஎஸ், ஈபிஸை தனியாக சந்திக்க மறுத்த பிரதமர் மோடி!

3 years ago 11 நவம்பர் 2022 11:08 AM | views : 191
திண்டுக்கல் விழாவுக்கு வரும் மோடியை தனித்தனியாக சந்தித்துப் பேச அனுமதி கேட்ட எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

50 பேரில் ஒருவராக வரிசையில் நின்று வரவேற்க மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக தற்போது 4 பிரிவுகளாக உடைந்துள்ளது. சசிகலா, டிடிவி தினகரன், எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். அதில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று பாஜக தலைமை வலியுறுத்தி வருகிறது. ஆனால் அதற்கு எடப்பாடி பழனிச்சாமி சம்மதிக்கவில்லை. தன்னை பொதுச் செயலாளராக ஏற்கும் பட்சத்தில் மட்டுமே இணைப்பை ஏற்க முடியும் என்று அவர் கூறி வருகிறார்.

இதனால் அவரை பணிய வைக்க அவருக்கு வேண்டிய காண்ட்ராக்டர்களிடம் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஆனாலும் எடப்பாடி பிடிவாதமாக உள்ளார். இந்தநிலையில் திண்டுக்கல் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள மோடி பிற்பகல் 2.30 மணிக்கு மதுரை விமான நிலையம் வருகிறார். அவரை வரவேற்கவும், தனித்தனியாக சந்தித்து பேசவும் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அனுமதி கேட்டனர். ஆனால் அவர்களை சந்திக்க மோடி மறுத்து விட்டார். கடந்த இரு முறை அவர் சென்னை வந்தபோது எடப்பாடி பழனிச்சாமி வரவேற்புக்கும், வழியனுப்பு விழாவுக்கு ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அனுமதி அளித்தனர். ஆனால் இந்த முறை அதற்கும் அனுமதிக்கவில்லை.

மதுரை விமானநிலையத்தில் 50 அழைப்பாளர்களுக்கு மோடியை வரவேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதில் அமைச்சர் ஐ.பெரியசாமி, தங்கம்தென்னரசு, மூர்த்தி, கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் வரவேற்கின்றனர். பாஜக தரப்பில் மேலிட பார்வையாளர் சுதாகர்ரெட்டி, எச்.ராஜா, முருகானந்தம் ஆகியோர் வரவேற்கின்றனர். அவர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது அணியைச் சேர்ந்த ராஜன்செல்லப்பா, உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோருக்கும், ஓ.பன்னீர்செல்வம் அணியில் அவருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவர்களும் வரிசையில் நின்று வரவேற்க வேண்டும். யாரையும் மோடி தனியாக சந்தித்து பேச மாட்டார் என்று அதிகாரிகள் அறிவித்து விட்டனர்.

இதனால் இரு தரப்பினரும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். மோடியை வரவேற்க இன்று காலை 9.45 மணிக்கு சென்னையில் இருந்து எடப்பாடி புறப்பட்டுச் சென்றார். காலை 11.30 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் புறப்பட்டுச் சென்றார். இருவரும் மதுரையில் தனித்தனி ஓட்டலில் தங்கியுள்ளனர். விமானநிலையத்தில் ஒரே வரிசையில் தனித்தனியாக நின்று வரவேற்கின்றனர்.இரு அதிமுக தலைவர்களையும் மோடி தனியாக சந்திக்க மறுத்தது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக ANNAMALAI ADMK AMMK AIADMK TTV DHINAKARAN MK STALIN டிடிவி தினகரன் TAMIL NADU எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் முக ஸ்டாலின் காங்கிரஸ் பாராளுமன்ற தேர்தல் ANBUMANI RAMADOSS தமிழக வெற்றிக் கழகம் மு.க.ஸ்டாலின் கனமழை UDHAYANIDHI STALIN ரஜினிகாந்த் இந்திய அணி PMK தமிழகம் பாமக INDIAN CRICKET TEAM சீமான் பிரதமர் மோடி அன்புமணி ராமதாஸ் கொலை CONGRESS சட்டசபை தேர்தல் EDAPPADI PALANISWAMI KEERTHY SURESH COIMBATORE கோவை தீபாவளி வடகிழக்கு பருவமழை கைது அமமுக PARLIAMENT ELECTION விடுமுறை THIRUMAVALAVAN திருமாவளவன் ஓபிஎஸ் NELLAI TAMIL ACTRESS தமிழ்நாடு கள்ளக்காதல் TAMILAGA VETTRI KAZHAGAM திருநெல்வேலி மதுரை AJITH SEEMAN நெல்லை தென்காசி ASSEMBLY ELECTIONS 2024 T20 WORLDCUP ELECTION COMMISSION பாலியல் தொல்லை திருப்பரங்குன்றம் THOOTHUKUDI வன்னியர் அஜித் வானிலை ஆய்வு மையம் கீர்த்தி சுரேஷ் மழை MADURAI OPS தேவர் NORTHEAST MONSOON தமிழக அரசு டிரெண்டிங் டாப் நியூஸ்