Tamil News & POLLING

 

பிரதமர் நரேந்திர மோடிக்கு சொந்தமா கார் கூட கிடையாதாம்!

3 years ago 09 ஆகஸ்ட் 2022 04:30 PM | views : 161
பிரதமர் நரேந்திர மோடியின் அசையும், அசையா சொத்து விவரங்களை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டை விட ரூ.26 லட்சம் அதிகரித்து, ரூ.2.23 கோடியாக உயர்ந்துள்ளது என பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியிடம் அசையா சொத்துக்கள் எதுவும் இல்லை என்றும் அசையும் சொத்துக்கள் மட்டுமே இருப்பதாகவும், அதிலும் பெரும்பகுதி வங்கி டெபாசிட், அஞ்சலக சேமிப்பு, காப்பீடுகள் மட்டுமே உள்ளன என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

பிரதமருக்கு சொந்தமாக கார்கள் எதுவும் இல்லை. அதேவேளையில், பிரதமர் மோடி சொந்தமாக 1.73 லட்சம் மதிப்பு கொண்ட 4 தங்க மோதிரங்கள் வைத்துள்ளார். காந்தி நகரில் பிரதமர் மோடிக்குச் சொந்தமாக இருந்த அவரின் பங்கு நிலத்தையும் தானமாக வழங்கிவிட்டார். பிரதமர் மோடி தன்னிடம் ரொக்கமாக 35,250 ரூபாய் மட்டுமே வைத்திருக்கிறார்.

நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தின் முதல்வராக 12 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார். அதேபோல், தற்போது இரண்டாவது முறையும் சேர்த்து மொத்தம் 8 ஆண்டுகள் அவர் பிரதமராக பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக TVK BJP அண்ணாமலை தவெக ANNAMALAI AMMK MK STALIN ADMK பாராளுமன்ற தேர்தல் TAMIL NADU TTV DHINAKARAN காங்கிரஸ் டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமி AIADMK உதயநிதி ஸ்டாலின் முக ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் ANBUMANI RAMADOSS மு.க.ஸ்டாலின் ரஜினிகாந்த் PMK தமிழகம் இந்திய அணி கனமழை CONGRESS UDHAYANIDHI STALIN பாமக சீமான் INDIAN CRICKET TEAM பிரதமர் மோடி அன்புமணி ராமதாஸ் PARLIAMENT ELECTION கொலை தீபாவளி அமமுக EDAPPADI PALANISWAMI கோவை சட்டசபை தேர்தல் COIMBATORE கைது வடகிழக்கு பருவமழை KEERTHY SURESH ஓபிஎஸ் TAMIL ACTRESS SEEMAN NELLAI தமிழ்நாடு கள்ளக்காதல் மதுரை AJITH திருமாவளவன் TAMILAGA VETTRI KAZHAGAM நெல்லை THIRUMAVALAVAN திருநெல்வேலி விடுமுறை தென்காசி திருப்பரங்குன்றம் டாப் நியூஸ் டிரெண்டிங் நடிகை MADURAI ASSEMBLY ELECTIONS THOOTHUKUDI வானிலை ஆய்வு மையம் வன்னியர் ELECTION COMMISSION அஜித் தமிழக அரசு தேவர் 2024 T20 WORLDCUP OPS கீர்த்தி சுரேஷ் NORTHEAST MONSOON பாலியல் தொல்லை மழை