Tamil News & POLLING

 

யாஷிகா இல்லை என்றால் எனக்கு வாழ்க்கை இல்லை! பிக்பாஸ் வீட்டில் நிரூப் நந்தகுமார்!

4 years ago 15 அக்டோபர் 2021 06:20 AM | views : 163
பிக் பாஸ் 5க்கு வந்தது எப்படி, முன்னாள் காதலி யாஷிகா பற்றியும் ஓப்பனாக பேசி இருக்கிறார் நிரூப். என்ன கூறி உள்ளார் என பாருங்க.


என் பெயர் நிரூப், வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். சென்னை அயனாவரம் அருகில் எங்கோ பிறந்தேன். நான் சின்ன வயதில் இருந்தே பள்ளியில் ரொம்ப சைலன்ட் ஆன ஒரு பையன். நானும் யாருடனும் நேரம் எடுத்து பேச மாட்டேன், என்னுடனும் யாரும் எப்ப மாட்டாங்க.

நான் 9ம் வகுப்பு படிக்கும்போது எனது வாழ்க்கையில் ஒரு பெரிய சோகமான விஷயம் நடக்கிறது. எனது அம்மாவிற்கு Schizophrenia என்கிற நோய் இருக்கிறது என கண்டுபிடித்தார்கள். அது ஒரு mental disorder. அவர் என்ன செய்கிறார் என அவருக்கே தெரியாது.



நான் 10ம் வகுப்பு முடித்துவிட்டு பாலிடெக்னிக் சேர்ந்தேன். அப்போது தான் எனக்கு வாழ்க்கையா பல விஷயங்களை சொல்லி கொடுத்தது. நான் சேர்ந்த கல்லூரியில் படித்தவர்கள் 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் பலர் இருந்தார்கள். அவர்களை பார்த்து எனக்கு பயமாக இருந்தது. அவர்கள் சென்னை லோக்கல் ஸ்லாங்கில் பேசினார்கள். எனக்கு தமிழ் தெரியாது என அவர்களிடம் பொய் கூறியவிட்டேன். ஒருவாரத்தில் அவர்கள் நம்பிவிட்டார்கள்.

அதன் பின் அந்த பொய்யை காப்பாற்றுவதற்காக நடித்தேன். அவர்கள் உடன் பேசவே வேண்டாம் என நினைத்தேன், அதனால் தான் அப்படி சொன்னேன். சில மாதங்களுக்கு பிறகு தான் அவர்களை பற்றி எல்லாம் என தெரியவந்தது. என் உடன் தான் இருப்பார்கள், ஆனால் என்னை பற்றியே தவறாக பேசுவார்கள்.

மூன்று வருடம் அப்படியே நடித்தேன், எனக்கு தமிழ் தெரியும் என தற்போது அவர்களுக்கு தெரிந்தால் கூட அவர்களுக்கு ஷாக் ஆக இருக்கும். அந்த காலகட்டத்தில் நான் மனிதர்கள் பற்றி நான் அதிகம் புரிந்துகொண்டேன்.



நான் டிப்ளமோவில் டிஸ்டின்க்ஷன் வாங்கி பாஸ் செய்தேன். அதன் பின் எஸ்ஆர்எம் கல்லூரியில் ஸ்கலர்ஷிப் உடன் பிடெக் படிக்க சேர்ந்தேன். ஆனால் எனக்கு சர்டிபிகேட் வேண்டாம் என் அப்பாவிடம் கூறிவிட்டேன்.

அதன் பின் மாடலிங் செய்யபோவதாகக் கூறினேன். ஆனால் உனக்கு தான் யாருமே தெரியாதே என அப்பா சொன்னார். அந்த நேரத்தில் தான் நான் யாஷிகாவை பார்த்தேன். நான் பிக் பாஸ் வருகிறேன் என சொன்னபோது யாஷிகாவின் முன்னாள் காதலர் வருகிறார் என செய்திகள் போட்டார்கள். அவர் மூலமாக எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருந்தால் கூட எனக்கு அது பெருமையான விஷயம்தான். அதை சொல்வதில் எனக்கு எந்த அசிங்கமும் கிடையாது. உனக்கு அசிங்கமாக இல்லையா என சிலர் என்னிடமே கேட்டார்கள். இதிலென்ன அசிங்கம், அது தான் உண்மை எனக்கு அவர்தான் ஒரு வாழ்க்கையை காட்டினாள். ஏன் மக்கள் தவறாக நினைக்கிறார்கள், ஒரு பெண்ணால் பையன் வளரவே கூடாதா.


எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என பெரிய ஆசை. பிக் பாஸ் வந்தால் அது கண்டிப்பாக கிடைக்கும் என எனக்கு தெரியும். நான் பல அடிக்ஷன் சென்று இருக்கிறேன். என் உயரத்தை பார்த்து பலரும் நிராகரித்து விடுவார்கள்.

பிக் பாஸ் வந்தால் புகழ் கிடைக்கும் அதன் மூலமாக நடிக்க வாய்ப்பு கிடைக்கும். நான் உயரத்திற்கு போகிற போது தான் என்னால் இன்னும் பத்து பேருக்கு உதவ முடியும் என கதையை சொல்லி முடித்தார் நிரூப்.

யாஷிகா பற்றி ஓப்பனாக பேசிய அவரை பிரியங்கா உள்ளிட்ட மற்ற போட்டியாளர்கள் பலரும் பாராட்டினார்கள்.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK தவெக ANNAMALAI AMMK MK STALIN AIADMK காங்கிரஸ் பாராளுமன்ற தேர்தல் டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமி ADMK TAMIL NADU TTV DHINAKARAN உதயநிதி ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் இந்திய அணி முக ஸ்டாலின் INDIAN CRICKET TEAM ANBUMANI RAMADOSS PMK கனமழை தமிழகம் ரஜினிகாந்த் சீமான் CONGRESS UDHAYANIDHI STALIN பாமக அன்புமணி ராமதாஸ் PARLIAMENT ELECTION பிரதமர் மோடி கைது வடகிழக்கு பருவமழை அமமுக EDAPPADI PALANISWAMI COIMBATORE கோவை கொலை SEEMAN KEERTHY SURESH சட்டசபை தேர்தல் தீபாவளி TAMIL ACTRESS கள்ளக்காதல் தென்காசி THIRUMAVALAVAN NELLAI நெல்லை திருமாவளவன் TAMILAGA VETTRI KAZHAGAM திருநெல்வேலி மதுரை ஓபிஎஸ் தமிழ்நாடு AJITH விடுமுறை THOOTHUKUDI டிரெண்டிங் NORTHEAST MONSOON டாப் நியூஸ் திருப்பரங்குன்றம் பாலியல் தொல்லை SENGOTTAIYAN அஜித் ASSEMBLY ELECTIONS வன்னியர் ELECTION COMMISSION தேவர் 2024 T20 WORLDCUP வானிலை ஆய்வு மையம் கீர்த்தி சுரேஷ் தமிழக அரசு MADURAI நயினார் நாகேந்திரன் OPS