Tamil News & POLLING

 

சிவகார்த்திகேயன் பட நடிகர் பவுன்ராஜ் மாரடைப்பால் மரணம்

4 years ago 15 மே 2021 01:24 PM | views : 179
சினிமா துறையில் பலர் கொரோனா காரணமாகவும், மாரடைப்பு காரணமாகவும் மரணித்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் போன்ற படங்களில் நடித்த பவுன்ராஜ் மாரடைப்பால் காலமானார்.

தமிழகத்தில் கொரோனா 2-ம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக பல முக்கிய தலைவர்கள், பிரபலங்கள் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக சினிமா துறையில் பலர் கொரோனா காரணமாகவும், மாரடைப்பு காரணமாகவும் மரணித்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் மறைந்து சில வாரங்களில், நடிகர் விவேக் மாரடைப்பால் மரணமடைந்தார். இதையடுத்து, சூர்யா பட இயக்குநர் கே.வி.ஆனந்த் மாரடைப்பால் காலமானார். இதன்பின்பு நடிகரும், பன்முகக் கலைஞருமான பாண்டு சில தினங்களுக்கு முன்பு காலமானார்.

இந்த அதிர்ச்சியில் இருந்து திரையுலகினர் மீளுவதற்குள்ளாகவே சில தினங்களுக்கு முன் நடிகர் நெல்லை சிவா மாரடைப்பால் மறைந்தார். இந்நிலையில் மற்றுமொரு சினிமா பிரபலம் மாரடைப்பால் காலமாகியிருக்கிறார்.

தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் பவுன்ராஜ் மாரடைப்பு காரணமாக இன்று உயிரிழந்துள்ளார். இவர் இயக்குநர் பொன்ராமிடம் அசோசியேட் டைரக்டராகவும் பணியாற்றி வந்தார். இந்த தகவலையும் அவர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதையடுத்து பவுன் ராஜின் மறைவுக்கு பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றன.



இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK விஜய் திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை TVK BJP தவெக ANNAMALAI ADMK AMMK MK STALIN எடப்பாடி பழனிசாமி AIADMK TAMIL NADU டிடிவி தினகரன் TTV DHINAKARAN உதயநிதி ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் முக ஸ்டாலின் ANBUMANI RAMADOSS பாராளுமன்ற தேர்தல் ரஜினிகாந்த் இந்திய அணி கனமழை PMK UDHAYANIDHI STALIN INDIAN CRICKET TEAM சீமான் தமிழகம் பாமக கொலை CONGRESS பிரதமர் மோடி அன்புமணி ராமதாஸ் தீபாவளி வடகிழக்கு பருவமழை COIMBATORE EDAPPADI PALANISWAMI கோவை சட்டசபை தேர்தல் PARLIAMENT ELECTION KEERTHY SURESH கைது அமமுக திருமாவளவன் THIRUMAVALAVAN TAMILAGA VETTRI KAZHAGAM மதுரை நெல்லை NELLAI தென்காசி AJITH ஓபிஎஸ் தமிழ்நாடு விடுமுறை SEEMAN திருநெல்வேலி TAMIL ACTRESS கள்ளக்காதல் வன்னியர் தமிழக அரசு 2024 T20 WORLDCUP பாலியல் தொல்லை தேவர் டாப் நியூஸ் டிரெண்டிங் OPS கீர்த்தி சுரேஷ் திருப்பரங்குன்றம் வானிலை ஆய்வு மையம் MADURAI அஜித் THOOTHUKUDI ELECTION COMMISSION NORTHEAST MONSOON ASSEMBLY ELECTIONS