Tamil News & POLLING

 

மார்ச் 28 முதல் விஜய் பிரச்சாரம்? தேர்தல் அதிகாரிகளை சந்தித்த செங்கோட்டையன்!

4 hours ago 26 மார்ச் 2026 04:39 AM | views : 43
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே4 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் திமுக, அதிமுக, நாதக, தவெக உள்ளிட்ட கட்சிகளிடையே நான்கு முனைபோட்டி நிலவும் என்று கூறப்படுகிறது. இதனால், திமுக அதிமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு இறுதி செய்து தொகுதிகளை அறிவித்துள்ளது.



2026 சட்டமன்ற தேர்தல்
இதனைத் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகிறது. மறுபுறம் தமிழ்சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந் த விஜய் முழு அரசியவாதியாக மாறி சட்டமன்றத் தேர்தலை முதன்முறையாக சந்திக்க உள்ளார். மேலும்,முதல் தேர்தலில் தவெக 234 சட்டமன்றத் தொகுதிகளில் தனித்துக் களமிறங்க உள்ளது.

234 தொகுதிகளிலும் தனியாக போட்டியிட முடிவு செய்துள்ள விஜய்யின் தவெக கட்சி, முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை நாளை மறுநாள் வெளியிடும் என தகவல் வெளியாகியுள்ளது.தவெக தலைவர் விஜய் சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிட உள்ளார் என்ற செய்தி கடந்த சில நாட்களாக அரசியல் வட்டாரங்களில் பரவி வருகிறது.



234 தொகுதிகளில் தவெக தனித்து போட்டி
தவெக கட்சியின் சமீபத்திய நடவடிக்கைகளும் இதை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளன. மேலும் தனது தேர்தல் பிரசாரத்தை பெரம்பூரிலிருந்து தொடங்க விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதனால் தவெக கட்சியினர் உற்சாகத்தில் உள்ளனர். விஜய் போட்டியிடும் தொகுதி என்பதால் பெரம்பூர் தற்போது முக்கிய கவனம் பெறும் தொகுதியாக மாறியுள்ளது. இதே நேரத்தில், அந்த தொகுதியில் விஜய்யை தோற்கடிக்க ஆளும் திமுக தீவிரமாக திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.


மேலும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்த விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு விஜய் பிரச்சாரத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை விஜய் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடரவில்லை. இந்த சூழலில் தவெக தலைவர் விஜய் வரும் 28ஆம் தேதி முதல் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதற்கான முழு பாதுகாப்பையும் வழங்கு கோரி தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனை பட் நாயக் மற்றும் உள்துறை செயலாளர் தீரஜ் குமாரை தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் சந்தித்து மனு அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், திடீரென்று தலைமை செயலகத்திற்கு வர காரணம் என்ன? முதல்வர் மு க ஸ்டாலினிடம் ஏதாவது கோரிக்கை வைக்க வந்தீர்களா என்று செய்தி அவர்கள் கேள்வி எழுப்பினர்.


அதற்கு விஜயின் தேர்தல் பிரச்சாரத்திற்காக தலைமை தேர்தல் அதிகாரியை சந்திக்க வந்துள்ளோம் தேர்தலை பொருத்தவரைக்கும் என்ன மாதிரியான விதிகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு அதனை பின்பற்ற வந்து இருக்கிறோம் என்று கூறினார். இதன் மூலம் விஜய் தேர்தல் பிரச்சாரம் விரைவில் நடக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

முன்னதாக விஜய் அரசியல் பரப்புரைக் கூட்டங்கள் நடத்தபடும் போது எல்லாம் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு வருகிறது. இதனால், விஜய் பிண அரசியல் செய்து வருவதாக எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனத்தை முன் வைத்து வருகிறது.



இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY சென்னை அதிமுக CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக AMMK ANNAMALAI டிடிவி தினகரன் TTV DHINAKARAN ANBUMANI RAMADOSS MK STALIN TAMIL NADU பாராளுமன்ற தேர்தல் AIADMK மு.க.ஸ்டாலின் ADMK எடப்பாடி பழனிசாமி பாமக காங்கிரஸ் அன்புமணி ராமதாஸ் PMK முக ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் CONGRESS கனமழை உதயநிதி ஸ்டாலின் தமிழகம் இந்திய அணி ரஜினிகாந்த் PARLIAMENT ELECTION சட்டசபை தேர்தல் தமிழ்நாடு சீமான் COIMBATORE கொலை INDIAN CRICKET TEAM கோவை திருமாவளவன் வடகிழக்கு பருவமழை பிரதமர் மோடி OPS EDAPPADI PALANISWAMI தீபாவளி KEERTHY SURESH மதுரை AJITH கைது UDHAYANIDHI STALIN அமமுக THIRUMAVALAVAN TAMILAGA VETTRI KAZHAGAM வன்னியர் BIGG BOSS TAMIL விடுமுறை 2024 T20 WORLDCUP தேவர் ASSEMBLY ELECTIONS TAMIL ACTRESS NELLAI தென்காசி கீர்த்தி சுரேஷ் SURIYA CSK ஓபிஎஸ் திருப்பரங்குன்றம் SEEMAN திருநெல்வேலி PRIME MINISTER MODI 2024 டி20 உலக கோப்பை நடிகை கள்ளக்காதல் வானிலை ஆய்வு மையம் NORTHEAST MONSOON MADURAI அஜித் நெல்லை தமிழக அரசு டிரெண்டிங் டாப் நியூஸ்