Tamil News & POLLING

 

கர்நாடகத்தில் 13 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் - 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

3 months ago 03 டிசம்பர் 2025 04:48 AM | views : 183
பெலகாவி,

கர்நாடக மாநிலம் பெலகாவி (மாவட்டம்) தாலுகா முர்கோடு போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் 13 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறாள். அந்த சிறுமி அங்குள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்த நிலையில் கடந்த மாதம் (நவம்பர்) 23-ந்தேதி அந்த மாணவி, தனது வீட்டில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் உள்ள மாவு அரைவை ஆலைக்கு மாவு அரைக்க சென்றாள். அப்போது அங்கு அதேப்பகுதியை சேர்ந்த மணிகண்டா தின்னிமணி, ஈரண்ணா ஆகியோர் வந்தனர். அவர்கள் சிறிது தூரம் சிறுமியை பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.

பின்னர் சிறுமி கிராமத்தின் வெளிப்பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தின் அருகே சென்றபோது, பின்தொடர்ந்து வந்த 2 பேரும் திடீரென்று சிறுமியின் வாயை பொத்தி கரும்பு தோட்டத்துக்குள் தூக்கி சென்றனர். அங்கு வைத்து 2 பேரும் சிறுமியை மாறி, மாறி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர்களிடம் இருந்து தப்பி ஓடிய சிறுமி, இதுபற்றி தனது பெற்றோரிடம் கூறினாள்.

இதற்கிடையே சிறுமியின் குடும்பத்துக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. இந்த சம்பவம் பற்றி வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக சிலர் மிரட்டி உள்ளனர். இதனால் பயந்து போன அவர்கள் உடனே இதுபற்றி புகார் எதுவும் அளிக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சிறுமியின் பெற்றோர், கூட்டு பலாத்காரம் குறித்து முர்கோடு போலீசில் புகார் அளித்தனர். இதனை அறிந்த மணிகண்டா, ஈரண்ணா ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். இதுகுறித்து முர்கோடு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள 2 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக ANNAMALAI AMMK MK STALIN எடப்பாடி பழனிசாமி ADMK AIADMK உதயநிதி ஸ்டாலின் காங்கிரஸ் டிடிவி தினகரன் TTV DHINAKARAN பாராளுமன்ற தேர்தல் TAMIL NADU தமிழக வெற்றிக் கழகம் மு.க.ஸ்டாலின் INDIAN CRICKET TEAM இந்திய அணி ANBUMANI RAMADOSS முக ஸ்டாலின் CONGRESS ரஜினிகாந்த் கனமழை PMK சீமான் UDHAYANIDHI STALIN பாமக தமிழகம் PARLIAMENT ELECTION அன்புமணி ராமதாஸ் பிரதமர் மோடி அமமுக தீபாவளி வடகிழக்கு பருவமழை கைது COIMBATORE கோவை EDAPPADI PALANISWAMI கொலை SEEMAN KEERTHY SURESH சட்டசபை தேர்தல் திருநெல்வேலி தமிழ்நாடு TAMIL ACTRESS THOOTHUKUDI கள்ளக்காதல் THIRUMAVALAVAN மதுரை திருமாவளவன் AJITH TAMILAGA VETTRI KAZHAGAM ஓபிஎஸ் தென்காசி விடுமுறை நெல்லை NELLAI தேவர் அஜித் SENGOTTAIYAN டிரெண்டிங் 2024 T20 WORLDCUP வன்னியர் NORTHEAST MONSOON கொரோனா OPS டாப் நியூஸ் நயினார் நாகேந்திரன் MADURAI திருப்பரங்குன்றம் TAMIL CINEMA கீர்த்தி சுரேஷ் ASSEMBLY ELECTIONS வானிலை ஆய்வு மையம் தமிழக அரசு பாலியல் தொல்லை ELECTION COMMISSION