Tamil News & POLLING

 

டெல்லி நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்; பயணிகள் அதிர்ச்சி

4 months ago 16 நவம்பர் 2025 04:53 PM | views : 169
ஜபல்பூர்-ஹஸ்ரத் நிஜாமுதீன் ஸ்ரீதம் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு இன்று மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விட்டுள்ளார். மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் இருந்து பேசிய அந்நபர், ரெயிலின் பொது பெட்டியில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.

இதுபற்றி ரெயில்வே நிலைய இயக்குநர் என்.பி. சிங் கூறும்போது, வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து, ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், வெடிகுண்டு எதுவும் இல்லை என தெரிய வந்தது.

இதன்பின்னர், மதுரா ஜங்சனுக்கு ரெயில் வந்ததும் முழுமையாக வெடிகுண்டு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்தது. பெட்டியின் இருக்கை மற்றும் பயணிகளின் உடமைகளில் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், சந்தேகத்திற்குரிய பொருள் எதுவும் கண்டறியப்படவில்லை.

இதன்பின்னர் ரெயில் டெல்லி நோக்கி சென்றது என அவர் கூறினார். இதுபற்றி அறிந்ததும் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். எனினும், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்ததும் நிம்மதி அடைந்தனர்.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக ANNAMALAI AIADMK AMMK ADMK எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரன் MK STALIN TAMIL NADU உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN இந்திய அணி பாராளுமன்ற தேர்தல் தமிழக வெற்றிக் கழகம் INDIAN CRICKET TEAM முக ஸ்டாலின் காங்கிரஸ் மு.க.ஸ்டாலின் ANBUMANI RAMADOSS தமிழகம் கனமழை ரஜினிகாந்த் PMK UDHAYANIDHI STALIN சீமான் பாமக அன்புமணி ராமதாஸ் CONGRESS பிரதமர் மோடி கைது கொலை தீபாவளி வடகிழக்கு பருவமழை PARLIAMENT ELECTION NELLAI KEERTHY SURESH EDAPPADI PALANISWAMI அமமுக COIMBATORE கோவை சட்டசபை தேர்தல் THOOTHUKUDI விடுமுறை THIRUMAVALAVAN AJITH தமிழ்நாடு தென்காசி திருநெல்வேலி OPS TAMIL ACTRESS SEEMAN கள்ளக்காதல் நெல்லை TAMILAGA VETTRI KAZHAGAM மதுரை திருமாவளவன் டாப் நியூஸ் டிரெண்டிங் திருப்பரங்குன்றம் 2024 T20 WORLDCUP கொரோனா வன்னியர் ஓபிஎஸ் SENGOTTAIYAN தேவர் ASSEMBLY ELECTIONS MADURAI கீர்த்தி சுரேஷ் NORTHEAST MONSOON வானிலை ஆய்வு மையம் அஜித் TAMIL CINEMA ELECTION COMMISSION தமிழக அரசு