Tamil News & POLLING

 

தொடர் கனமழை: இன்று எங்கெல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை தெரியுமா?

4 months ago 23 அக்டோபர் 2025 01:54 AM | views : 158
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக பெரும்பாலான பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறாது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.
வட தமிழக கடலோர பகுதியில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வடதமிழகம் - தெற்கு ஆந்திர கடலாரப்பகுதிகளை நோக்கி நகரும் என்றும் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்நிலையில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக அந்தந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பது வழக்கம். அந்த வகையில் இன்று காலை 6.30 மணி நேர நிலவரப்படி ஒரே ஒரு மாவட்டத்திற்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தருமபுரி மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடு செய்யும் விதமாக அடுத்த மாதம் 15 ஆம் தேதியன்று வேலை நாளாக அறிவித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதீஸ் உத்தரவிட்டுள்ளார்.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை தவெக TVK ANNAMALAI AMMK ADMK எடப்பாடி பழனிசாமி AIADMK டிடிவி தினகரன் உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN TAMIL NADU MK STALIN காங்கிரஸ் பாராளுமன்ற தேர்தல் ANBUMANI RAMADOSS தமிழக வெற்றிக் கழகம் மு.க.ஸ்டாலின் முக ஸ்டாலின் PMK UDHAYANIDHI STALIN கனமழை இந்திய அணி INDIAN CRICKET TEAM தமிழகம் ரஜினிகாந்த் சீமான் பாமக CONGRESS பிரதமர் மோடி PARLIAMENT ELECTION அன்புமணி ராமதாஸ் சட்டசபை தேர்தல் KEERTHY SURESH EDAPPADI PALANISWAMI COIMBATORE கோவை NELLAI தீபாவளி அமமுக வடகிழக்கு பருவமழை கைது கொலை TAMILAGA VETTRI KAZHAGAM மதுரை தமிழ்நாடு TAMIL ACTRESS தென்காசி கள்ளக்காதல் OPS திருமாவளவன் SEEMAN THIRUMAVALAVAN திருநெல்வேலி நெல்லை AJITH கீர்த்தி சுரேஷ் விடுமுறை தமிழக அரசு SENGOTTAIYAN திருப்பரங்குன்றம் 2024 T20 WORLDCUP THOOTHUKUDI கொரோனா ஓபிஎஸ் ASSEMBLY ELECTIONS TAMIL CINEMA MADURAI வன்னியர் தேவர் வானிலை ஆய்வு மையம் அஜித் டிரெண்டிங் டாப் நியூஸ் NORTHEAST MONSOON நடிகை ELECTION COMMISSION