Tamil News & POLLING

 

ஆபாச பேச்சு.. டிக்டாக் திவ்யா நாகூரில் கைது.. தனிப்படை போலீஸ் சுற்றி வளைத்து பிடித்தது..!

4 years ago 17 செப்டம்பர் 2021 11:41 AM | views : 163
யூடியூபில் ஆபாசமாக பதிவுகளை வெளியிட்டு வந்த, திவ்யாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சிறந்த எஸ்யூவி சொந்தமாக வைத்திருக்க உங்களுக்கோர் வாய்ப்பு.. இங்கே கிளிக் செய்யுங்கள்!

தேனி அருகே நாகலாபுரத்தை சேர்ந்தவர் சுகந்தி... டிக்டாக் வீடியோவை வெளியிட்டு, பிரபலமானவர்.. இந்த பிரபலமடைவதற்கு காரணமே, அவரது சர்ச்சை பேச்சுக்கள்தான்.. இதேபோல ஆபாசமாக பேசி பிரபலமானவர் திவ்யா.. இவர் தஞ்சையை சேர்ந்தவர்..!

திடீரென டிக்டாக் ஆப்புக்கு தடை விதிக்கப்பட்டுவிடவும், திவ்யா யூடியூப் பக்கம் தாவினார்.. நிறைய வீடியோக்களை பதிவேற்றினார்.. ஆனால், அந்த வீடியோக்களில் பெரும்பாலும் ஆபாசமாக இருந்ததாக கருத்துக்கள் பதிவாகி வந்தன.. திவ்யா மீது விமர்சனங்களும் கிளம்பின.

இதையேதான் சுகந்தியும் யூடியூப்பில் பின்பற்றி ய்து வந்தார்.. இவர்கள் இருவருக்கும் கடந்த 3 வருடங்களாகவே மோதல் இருந்து வந்தது.. வீடியோக்களை வெளியிட்டு, அதில் ஒருவரை ஒருவர் ஆபாசமாக திட்டி கொண்டிருந்தனர்.. பொதுவெளியிலேயே இவர்களின் சண்டை நடக்கவும், இது தொடர்பாக போலீஸ் வரை விஷயம் சென்றது.

கடந்த 2020 டிசம்பர் மாதம் சுகந்தி, தேனி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.. அதில், திவ்யா என்ற பெண் தன்னையும் தன் குடும்பத்தையும் சோஷியல் மீடியாவில் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.. அந்த புகாரின் அடிப்படையில் போலீசாரும் திவ்யாவிடம் விசாரணை நடத்தி வந்த நிலையில், அவர் ஆபாசமாக பேசியது உண்மைதான் என்பதை உறுதி செய்தனர்.

தனிப்படை பெண் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைத்து திவ்யாவை போலீசார் தேடி வந்தனர்... எனவே, எந்த நேரமும் திவ்யா கைதாகலாம் என்று கூறப்பட்டது.. ஆனால், விஷயம் கேள்விப்பட்ட திவ்யா, போலீசார் தன்னை தேடி கொண்டிருக்கிறார்கள் என்ற வீடியோ வெளியிட்டார்.. தனது குடும்பத்தை பிடித்து வைத்துகொண்டு தனக்கு ஜாமீன் எடுப்பதற்கு 30 ஆயிரம் ரூபாய் பணம் வேண்டும் என்றும், அதற்கு தனது கூகுள் பே மூலம் பணம் அனுப்ப கோரியும் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுவிட்டு, மறுபடியும் தலைமறைவாகி விட்டார்...

அந்த வீடியோ பதிவிட்டதால், அவரது செல்போன் நம்பரை வைத்து போலீசார் டிராக் செய்தனர்.. இதையும் தெரிந்து கொண்ட திவ்யா, தஞ்சை, சென்னை, வடலூர், புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு மாறி மாறி இடம்பெயர்ந்து கொண்டே இருந்துள்ளார்... இறுதியில் நாகபட்டினத்தில் திவ்யாவை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.. நாகூரில் தலைமறைவாக இருந்ததாக தெரிகிறது..


இதையடுத்து தேனி சைபர் க்ரைம் அலுவலகமும் அழைத்து வந்து விசாரித்தனர். இப்போது திவ்யா நிலக்கோட்டை ஜெயிலில் உள்ளார். ஏற்கனவே யூடியூபில் ஆபாச பதிவு செய்த பப்ஜி மதன் உள்பட ஒரு சிலர் கைது செய்ததையடுத்து தற்போது மேலும் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK தவெக ANNAMALAI AMMK MK STALIN AIADMK காங்கிரஸ் பாராளுமன்ற தேர்தல் டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமி ADMK TAMIL NADU TTV DHINAKARAN உதயநிதி ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் இந்திய அணி முக ஸ்டாலின் INDIAN CRICKET TEAM ANBUMANI RAMADOSS PMK கனமழை தமிழகம் ரஜினிகாந்த் சீமான் CONGRESS UDHAYANIDHI STALIN பாமக அன்புமணி ராமதாஸ் PARLIAMENT ELECTION பிரதமர் மோடி கைது வடகிழக்கு பருவமழை அமமுக EDAPPADI PALANISWAMI COIMBATORE கோவை கொலை SEEMAN KEERTHY SURESH சட்டசபை தேர்தல் தீபாவளி TAMIL ACTRESS கள்ளக்காதல் தென்காசி THIRUMAVALAVAN NELLAI நெல்லை திருமாவளவன் TAMILAGA VETTRI KAZHAGAM திருநெல்வேலி மதுரை ஓபிஎஸ் தமிழ்நாடு AJITH விடுமுறை THOOTHUKUDI OPS SENGOTTAIYAN திருப்பரங்குன்றம் ELECTION COMMISSION பாலியல் தொல்லை நயினார் நாகேந்திரன் வன்னியர் வானிலை ஆய்வு மையம் கீர்த்தி சுரேஷ் ASSEMBLY ELECTIONS அஜித் 2024 T20 WORLDCUP டாப் நியூஸ் டிரெண்டிங் தமிழக அரசு NORTHEAST MONSOON தேவர் MADURAI