Tamil News & POLLING

 

கனமழையினால் முடங்கிய மதுரை

1 year ago 26 அக்டோபர் 2024 03:01 AM | views : 159
மதுரையில் நேற்று கனமழை கொட்டித்தீர்த்தது. மாலை 3 மணிக்குப் பிறகு 15 நிமிடத்தில் 4.5 செ.மீட்டர் மழை பெய்ததால் வெள்ளக்காடாக மாறியது. கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அக்டோபர் மாதம் மழை பெய்தததாக கூறப்படுகிறது.

இந்த கனமழையால் முல்லை நகர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஆலங்குளம கண்மாய் நிரம்பியதுதான். முல்லை நகர் கிருஷ்ணாபுரம் காலனி 8-வது தெரு மற்றும் அதன் அருகாமையில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

நேற்று மாலையுடன் மழை நின்றாலும் இந்த பகுதிகளில் முழங்கால் அளவிற்கு மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வீடுகளுக்குள் வெள்ளம் சென்றுள்ளதால் மக்கள் மாடி மற்றும் பாதுகாப்பான இடத்திற்கு சென்றுள்ளனர்.

வெள்ளம் வடியததால் மக்களின் இயல்பு வாழ்த்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் நேற்று வந்து பார்வையிட்டனர். வெள்ளத்தை அப்புறப்படுத்துவதற்கு பணிகளை மெற்கொள்வதாக தெரிவித்தனர். ஆனால் இன்று காலை வரை யாரும் வரவில்லை. இப்படியே இருந்தால் காபி, டீ, கஞ்சி காய்த்து குடிப்பது எப்படி என பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்தனர்.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காணொலி மூலம் ஆய்வு கூட்டம் நடத்தினார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் துரிதமாக மேற்கொள்ளுமாறு அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அமைச்சர் மூர்த்தி வெள்ள நீர் அகற்றும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்களுக்குள் வெள்ள நீர் அகற்றும பணி முழுமையாக நிறைவு பெறும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக ANNAMALAI MK STALIN AMMK ADMK பாராளுமன்ற தேர்தல் எடப்பாடி பழனிசாமி AIADMK TTV DHINAKARAN உதயநிதி ஸ்டாலின் TAMIL NADU டிடிவி தினகரன் காங்கிரஸ் மு.க.ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் ANBUMANI RAMADOSS இந்திய அணி முக ஸ்டாலின் INDIAN CRICKET TEAM கனமழை சீமான் ரஜினிகாந்த் CONGRESS PMK UDHAYANIDHI STALIN பாமக தமிழகம் அன்புமணி ராமதாஸ் PARLIAMENT ELECTION பிரதமர் மோடி வடகிழக்கு பருவமழை கைது COIMBATORE கோவை சட்டசபை தேர்தல் தீபாவளி KEERTHY SURESH கொலை EDAPPADI PALANISWAMI SEEMAN அமமுக தமிழ்நாடு ஓபிஎஸ் AJITH நெல்லை கள்ளக்காதல் திருநெல்வேலி NELLAI THIRUMAVALAVAN திருமாவளவன் TAMILAGA VETTRI KAZHAGAM விடுமுறை மதுரை TAMIL ACTRESS தென்காசி THOOTHUKUDI NORTHEAST MONSOON தேவர் வன்னியர் MADURAI OPS ELECTION COMMISSION 2024 T20 WORLDCUP கொரோனா டாப் நியூஸ் திருப்பரங்குன்றம் ASSEMBLY ELECTIONS நயினார் நாகேந்திரன் அஜித் டிரெண்டிங் தமிழக அரசு பாலியல் தொல்லை வானிலை ஆய்வு மையம் TAMIL CINEMA கீர்த்தி சுரேஷ் SENGOTTAIYAN