Tamil News & POLLING

 

டானா புயல் காரணமாக கொல்கத்தா விமான நிலையம் மூடல்!

1 year ago 23 அக்டோபர் 2024 04:14 PM | views : 148
வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவாகி டானா புயலாக உருவெடுத்துள்ளது.

டானா புயல் 24-ந்தேதி அதிகாலையில் வடமேற்கு வங்கக்கடலில் தீவிர புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதன் எதிரொலியால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்கத்தா விமான நிலையம் 15 மணி நேரத்திற்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

டானா புயல் நாளை நள்ளிரவில் ஒடிசா- மேற்குவங்கம் இடையே கரையைக் கடக்கிறது. முன்னெச்சரிக்கையாக கொல்கத்தா விமான நிலையம், நாளை இரவு 8 மணி முதல் 15 மணி நேரத்திற்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 120 கி.மீ., வேகத்தில் காற்றுடன் கனமழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு கடலோர வழித்தடத்தில் 197 ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK தவெக ANNAMALAI MK STALIN AMMK காங்கிரஸ் TAMIL NADU TTV DHINAKARAN பாராளுமன்ற தேர்தல் ADMK உதயநிதி ஸ்டாலின் AIADMK எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரன் தமிழக வெற்றிக் கழகம் மு.க.ஸ்டாலின் ANBUMANI RAMADOSS INDIAN CRICKET TEAM இந்திய அணி முக ஸ்டாலின் ரஜினிகாந்த் CONGRESS கனமழை UDHAYANIDHI STALIN PMK சீமான் பாமக தமிழகம் பிரதமர் மோடி PARLIAMENT ELECTION அன்புமணி ராமதாஸ் கைது கோவை SEEMAN COIMBATORE அமமுக கொலை வடகிழக்கு பருவமழை KEERTHY SURESH EDAPPADI PALANISWAMI தீபாவளி சட்டசபை தேர்தல் திருநெல்வேலி TAMIL ACTRESS THOOTHUKUDI திருமாவளவன் மதுரை THIRUMAVALAVAN தமிழ்நாடு ஓபிஎஸ் TAMILAGA VETTRI KAZHAGAM விடுமுறை NELLAI தென்காசி நெல்லை கள்ளக்காதல் AJITH TAMIL CINEMA டாப் நியூஸ் டிரெண்டிங் அஜித் 2024 T20 WORLDCUP பாலியல் தொல்லை தமிழக அரசு SENGOTTAIYAN NORTHEAST MONSOON திருப்பரங்குன்றம் ASSEMBLY ELECTIONS கீர்த்தி சுரேஷ் ELECTION COMMISSION நயினார் நாகேந்திரன் MADURAI OPS கொரோனா தேவர் வன்னியர் வானிலை ஆய்வு மையம்